Author Archive
சரிகமபதநி #10 – அல்லு அல்லு அல்லு அல்லே!
சினிமா பாடல்களுக்கும் கர்நாடக இசைப் பாடல்களுக்கும் என்ன வித்தியாசம்? …..பாடலின் நடுவில் ஒரு கட்டைக் குரல் பாடகி தாளம் மாறி கத்துவதற்கு சினிமாப் பாடல்களில் அனுமதி உண்டு.ஆ, ஊ, கும்தலக்கா , உவ்வாஹு நீயா என்று துணைப்பாடகர்கள் இடையிடையே கத்தலாம். பாடகர் திடீரென்று சுருதியை உயர்த்தி…. … பாடலாம்.இவையெல்லாம் கர்நாடக சங்கீதத்தில் அனுமதிக்கப்படுவதில்லை. மேலும் தாளம் மிகவும் ஸ்ட்ரிக்ட் ஆக இருக்கிறது கர்நாடக சங்கீதத்தில். கைத்தட்டு ஒன்று விலகினாலும் அதற்கான விலையை பாடகர் கொடுக்க வேண்டி இருக்கும். இந்த freedom தான் சினிமா இசை பெரும்பாலான மக்களால் விரும்பப்படுவதற்குக் காரணம். கர்நாடக இசை என்பது கடிவாளம் இட்ட டொக்கு டொக்கு குதிரை வண்டிப் பயணம். சினிமா இசை என்பது ரோலர் கோஸ்டர் … நன்றி: சமுத்ரா _________________________ கர்நாடக இசைக்கும் திரை இசைக்கும் சோடி போட்டுப் பார்ப்பதே கொஞ்சம் தவறான விஷயம்தான். அங்கேயிருந்து இங்கே இருப்பவர்கள் நிறைய விஷயங்களைக் கடன் வாங்கிக் கொண்டாலும் அங்கே இருப்பதை இங்கே அப்படியே தருதல் ஆகவே ஆகாத காரியம். அது வேறு வட்டம்; இது வேறு [...]
சரிகமபதநி #9 – இசையை இணையத்தில் பகிர – பகுதி 2
சென்ற அத்தியாயத்தில் ஆடியோ அப்லோட் செய்வது எங்கே என்பதுவரை பேசினோம். அதை எப்படிச் செய்வது என்பதை இந்த அத்தியாயத்தில் பார்க்கலாம். சென்ற மற்றும் இந்த அத்தியாய இடைவெளியில் கூகுள் தன் Google Drive என்னும் ஆன்லைன் ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டு வந்திருக்கிறது. அதன் சாதக பாதகங்களை இப்போதுதான் டெக்னிகல் எக்ஸ்பர்ட்டுகள் அலசி ஆராய்ந்து கொண்டிருப்பதால், நாம் நம் பழைய வழிமுறை பற்றியே இப்போதைக்குப் பேசுவோம். கூகுள் சைட்’டில் நம் ஆடியோ ஃபைலை அப்லோட் செய்ய… 1) பக்கத்தை க்ரியேட் செய்ய… [...]
சரிகமபதநி #8 – இசையை இணையத்தில் பகிர…
ஒரு சிறு முன் அறிவிப்பு.. சென்ற அத்தியாயம் வரை கர்நாடக இசையின் ஸ்வர, ராக, தாளங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். சில பல காரணங்களால் (ஆட்டோவெல்லாம் அனுப்பினால் பயப்படுகிற ஆசாமியல்ல நாம்!) அவற்றை இப்போதைக்குத் தொடர இயலவில்லை. ஒரு சில அத்தியாயங்களுக்குப் பின் அந்த பாடங்களைத் தொடரப் பார்ப்போம்.. இசையை இணையத்தில் பகிர…. பாடும் ஆர்வம் நம்மில் பெரும்பாலானோருக்கு உண்டு. பாடியதை நண்பர்களுடன் பகிரும் ஆர்வமும் தைரியமும் அதில் நிச்சயமாக வெகு சிலருக்குத்தான் இருக்கும். அப்படிப்பட்ட வெகுசிலர் இணையத்தில் [...]
சரிகமபதநி #7 – ஸ்ருதிபேதம் Vs. அபஸ்வரம்
சென்ற அத்தியாயத்தில் ஸ்ருதி பற்றி பார்த்தோம். நம்மால் இயன்றவரை ஸ்ருதியை புரிந்து கொள்ளவும் பார்த்தோம். நான் இணைத்திருந்த ஸ்ருதி ஒலி இணைப்புகளுடன் தங்கள் குரலையும் இணைத்து, “இது சரியா?”, என்று கேட்டு இணையவுலக அன்பர்கள் மூவர் எனக்கு மெயில் அனுப்பியிருந்தார்கள் (சொல்லி வைத்தார்போல் எல்லோருமே, இதை வெளியிட்டு விட வேண்டாம் என்ற வேண்டுகோளோடு). மூவருக்கும் தனித்தனியே ரிப்ளை அனுப்பியிருக்கிறேன். இதில் விசேஷ்ம் என்னவென்றால் நானும் கூட இன்னமும் என் குரலையும் ஸ்ருதியையும் ஒட்ட வைத்து வாழ்நாளில் ஒரேயொரு [...]
சரிகமபதநி #6 – ஸ்ருதியுடன் பழகலாம் வாங்க
முந்தைய அத்தியாயங்களில் இரண்டு விஷயங்களை மிச்சம் வைத்தோம்; ஒன்று ஸ்ருதி, மற்றொன்று தாளம். ஸ்வரம், ஆரோகணம், அவரோகணம், ராகம் ஆகியவை பற்றி நாம் பேசியவைகள் நினைவில் இருக்கின்றனவா? மங்கலாகத்தான் நினைவில் இருக்கின்றன என்றால் ஒரு மறுபார்வை பார்த்துவிட்டு வந்துவிடுங்கள். சாஸ்திரிய இசை* தவிர்த்த மற்ற வகை இசைவகைகளில் அமையும் எல்லாப் பாடல்களும்** ராகம் (அல்லது ஸ்கேல்), அதன் ஸ்வரம், ஸ்வரத்தின் ஆரோகண, அவரோகணங்கள் என இவைகளைக் கொண்டு ஒரு கட்டுக்கோப்புடன் பின்னப்பட்டு விடுவதில்லை. பல ராகங்களை அல்லது பலவகை ஸ்கேல்களைத் [...]
சரிகமபதநி #5 – எது தான் நல்ல இசை?
உங்களுக்கு மிகவும் பிடித்த சாப்பாட்டு சமாச்சாரம் எது? என்னடா இவன் எப்போ பார்த்தாலும் சாட் ஐட்டம், கோழி, சாப்பாட்டு சமாச்சாரம் அப்படின்னே பேசறான்னு பாக்காதீங்க ஜஸ்ட் சொல்லுங்க. இட்லி-சாம்பார்? பர்கர்? சிக்கன் பிரியாணி? வத்தக்குழம்பு-சுட்ட அப்பளம்? பிட்ஸா? ஓகே குறிச்சி வெச்சாச்சு. இந்த அத்தியாயத்துக்குள் நுழையலாம். சரிகமபதநி முதல் அத்தியாயத்தில் ”எதைப் பற்றி” இந்தத் தொடர் பேசப்போகிறது என்ற லிஸ்டில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்… ”அந்திமழை பொழிகிறது பாடலில் இளையராஜாவின் இசையை சிலாகித்துப் பேசவும், எவண்டி உன்னப் பெத்தான் போன்ற அசந்தர்ப்பமாக வந்து [...]
சரிகமபதநி #4 கற்போமா கர்னாடிக்?
கர்னாடக இசையை ரசிக்கத் தெரிந்தால் வாழ்வு முழுமை பெறுகிறது - எழுத்தாளர் சுஜாதா சமீபத்தில் இன்னிசை அன்பர் ஒருவர் இணைய சாட்டில் வந்தார். ஆன்லைன் தம்புரா ஒன்றினை எப்படி ட்யூன் செய்வது என்று அவரிடம் அறிவுரை கேட்டுக் கொண்டிருந்தேன். “உன்னோட ஸ்ருதி என்ன?”, என்று கேட்டார். “யாருக்குத் தெரியும்?”, என்றேன். கிட்டத்தட்ட தமிழில் உள்ள அனைத்து கெட்ட வார்த்தைகளிலும் திட்டி தீர்த்து விட்டு, ஸ்ருதிப்பெட்டியை ஆன் செய்யச்சொன்னார். (அதை கமல்ஹாசன் ஒத்துக்குவாரா என்ற கேள்வியை அவர் ரசிக்கவில்லை என்பது அவருடைய பதிலிலிருந்தே [...]
நண்பன் – புதுசா ஒண்ணுமேயில்லே பாஸ்!
சிலவருடங்களுக்கு முன் வேலைவிஷயமாக சிலநாட்கள் திண்டிவனத்தில் தங்கியிருந்தபோது தூக்கம் வராத ஒரு இரவில் ஏதேனும் சினிமாவிற்குப் போவோம் என்று பக்கத்தில் இருந்த தியேட்டருக்கு நானும் நண்பனும் போனோம். சிரஞ்சீவி போஸ்டரில் போஸ் தந்து கொண்டிருந்தார். தெலுங்குவிலிருந்து தமிழுக்கு டப்பிங் செய்யப்பட்ட படம் ஏதோ ஒன்று. அடடே! மனவாடு படம்! சுவாரசியமாகத்தான் இருக்கும் என்று உள்ளே நுழைந்தோம். படம் ஆரம்பித்த சில நிமிடங்களில், இந்தப்படத்தை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்று தோன்றியது. இரண்டாவது காட்சியில் விளங்கிவிட்டது. அது ரஜினி நடித்த [...]
சரிகமபதநி #3 – சின்ன வீடா வரட்டுமா?
”என்ன! உன் கல்யாணத்துல பாட்டுக் கச்சேரி இல்லையா?”, எல்லோரும் கேட்டுக் கேட்டு மாய்ந்துதான் போனார்கள். இசைக்குழு நண்பர்களிடம் பத்திரிகை கொடுக்கும்போது, “என்ன சார், கல்யாணம்னு சொல்றீங்க நம்மகிட்ட கச்சேரிக்கு கேக்கவேயில்லையே, சாய்ஸ்ல விட்டுட்டீங்களா என்னையெல்லாம்?”, என்றவர்களிடமும், “இல்லைங்க கச்சேரி வைக்கலை”, என்று ரொம்பவே நெளிந்துதான் சொல்ல வேண்டியிருந்தது. சரவணனிடம் பத்திரிக்கை கொடுக்கப் போகவே பயமாக இருந்தது. “அட்வான்ஸா சொல்லிடு மச்சி! உன் கல்யாணத்துக்கு நல்லா டாப் க்ளாஸ் மக்களை புக் பண்ணி வைக்கணும். ஆறுமாசம் முன்னயே புக் [...]
சரிகமபதநி #2 – டோபாமைன் எஃபெக்ட்ஸ்
டோபாமைன் எஃபெக்ட்ஸ் காதுகிழியும் சில வல்லிசைப் பாடல்களைக் காது கொடுத்துக் கேட்க நேர்கையில், சில நாராச வரிகளை அல்லது கேளவொண்ணா அர்த்தங்களைத் தாங்கி வரும் பாடல்களைக் கேட்கையில் இந்தப் பாடல்களுக்கெல்லாம் ஏதும் தணிக்கை இல்லையோ, இவற்றை ஏன் தடை செய்யாமல் வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறோம். எந்தப் பாட்டையெல்லாம் தடை செய்யவேண்டும் எனக் கேட்டால் உங்களில் ஒவ்வொருவரும் ஒரு பத்து பாடல்கள் கொண்ட லிஸ்டை கடகடவென ஒப்பிப்பீர்கள். ஆனால், என் நாட்டு மக்கள் பாடல்களையே கேட்கக் கூடாது. இசை [...]
சரிகமபதநி – 1 – எந்தரோ மஹானுபாவு
”எந்தரோ மஹானுபாவு அந்தரிகி வந்தனமு” எச்சரிக்கை 1: இசை பற்றிய தொடர் என்றவுடன் பெரும் இசை ஆராய்ச்சிகளை நடத்தும் ஒரு தொடர் என்று ஆர்வமாக ஓடி வருவதோ அல்லது பிடரி பின்னங்காலில் இடர ஓடுவதோ வேண்டாம். உங்களுக்குத் தெரிந்த விஷயங்களையும், எனக்குத் தெரியாத விஷயங்களை எளிமையாகப் பகிர்ந்து கொள்வோம் வாருங்கள்! எதுவரை போகிறது எனப் பார்ப்போம். எச்சரிக்கை 2: இந்தக் கட்டுரைத் தொடரினைத் தொடர்ந்து வாசித்து வரும் ஒவ்வொருவரும் சிந்துபைரவியில் தொடங்கி சிவரஞ்சனியில் சஞ்சாரித்துப் பாடிடும் வித்தையையும், [...]






