Author Archive
விலங்குப் பண்ணை – புத்தக விமரிசனம்
ஜார்ஜ் ஆர்வெல் 1945 ம் ஆண்டு வெளியிட்ட நூல் இது. மேலோட்டமாக ஒரு பண்ணையைப் பற்றிய கதையாகத் தெரிந்தாலும் இது கம்யுனிச ரஷ்யா பற்றியது என்பது சுலபமாகப் புரிந்துவிடும். உலகிற்கே ஓர் உதாரணமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்டாலினின் ஆட்சியில் நடந்த படுகொலைகளும், போலீஸ் ராஜ்ஜியமும் உலகையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கின. ஓல்ட் மேஜர் என்கிற பன்றியினால் ஏற்றி வைக்கப்பட்ட புரட்சி என்கிற சிறு பொறி எப்படி பெரும் தழலாய் மாறி அந்தப் பண்ணையையே பற்றி ஏறிய [...]
தலைவர் #3, வித்தியாசமான இணைய தளம்
தலைவருக்காக எத்தனையோ இணைய தளங்கள் இருக்கின்றன. அவரை பாராட்டி, அவரை ஆதரித்து, அவரை ஆராதித்து, அவரை கிண்டல் செய்து – இப்படி ‘பிழைக்கவும் ரஜினி, பழிக்கவும் ரஜினி’ என்று பத்திரிகைகள் செய்யும் இரட்டை வேடம் போல, இணைய தளங்களும் ஹிட் வாங்க தலைவரை உபயோகிக்கின்றன. (இதில் எதிலுமே சேராதது நமது கட்டுரை.காம் என்பது உங்களுக்கெல்லாம் தெரிந்த விஷயம்!) இதோ ஒரு இணைய தளம்..(http://www.desimartini.com/allaboutrajni.htm) வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆமாம்.. இந்த இணைய தளத்தினுள் நுழைந்த பிறகு நமது இணைய [...]
சாத்தான்கள் ஓதிய வேதம் – இலங்கை நாடாளுமன்றத்தில் கொலைவெறி
இலங்கை நாடாளுமன்றத்தில் (அது ஒண்ணு தான் கேடு) நடைபெற்ற விவாதத்தில் (ஓ..அந்தக் கண்ராவியெல்லாம் கூட நடக்குமா?) பேசிய ஆளும்கட்சி உறுப்பினர் அஸ்வர் என்ற நபர் உதிர்த்துள்ள தத்துவ முத்துகள் : தமிழ்நாட்டுகாரர்களுக்கு கொலை வெறி பிடித்துள்ளது. அதனால் தான் அவர்கள் கொலை வெறி கொலை வெறி என பாடல்களில் கூட பாடுகின்றனர். இந்தக் கொலை வெறிப் பாடலுக்கு எமது யாழ்ப்பாண இளைஞன் பதிலடி கொடுத்து பாடியுள்ளார். அந்தப் பாடலை தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும், திமுகவின் கருணாநிதிக்கும் அனுப்பி [...]
இதான்யா அமெரிக்கா! – சபாஷ்
இப்போது தெரிகிறதா, அமெரிக்கா ஏன் முன்னேறிக் கொண்டே செல்கிறது என்று?! சபாஷ், அந்தப் பணியாளர்! சபாஷ், ஒபாமா!
முன்னேற முத்தான 11 வழிகள்
சுய முன்னேற்ற நூல்கள் நூற்றுக்கணக்கான பக்கங்களில் வளவள என்று என்ன சொல்கின்றன? அத்தனை பக்கங்களைப் படித்து முடிப்பதிலேயே நமது முன்னேற்றம் சில நாட்களுக்குத் தடை பட்டு விடும் போலிருக்கிறது. இதோ எந்தவொரு நூலை எடுத்தாலும் கீழ்கண்ட 11 பாயிண்ட்களில் ஒன்றாகத் தான் இருக்கும். இலக்கு இலக்கு வைப்பது எப்போதுமே அடைவதற்காக மட்டுமேயல்ல.ஆச்சரியமாக இருக்கிறதா? ஆமாம், எவரெஸ்ட் உச்சியை அடைய வேண்டும் என்பதை இலக்காக வைத்து பயணம் செய்யலாம். அதனால் உச்சியை அடைவது தானே இலக்கு. எனவே போகும் [...]
லாகோஸ் கொள்ளையர்கள் – நைஜீரியன் ஸ்கேம் #1
தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர் அவர்! வெளிநாடு ஒன்றில் வியாபாரம் செய்து வருகிறார். கை நிறையச் சம்பாதிக்கிறார். சமீபத்தில் வேறொரு நாட்டில் வசிக்கும் இந்தியர் ஒருவரிடம் இருந்து இவர் வியாபாரத்திற்காக சில பொருட்களை வாங்கியிருக்கிறார். கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் அமெரிக்க டாலர்! அதற்கான தொகையை ஹாங்காங்கில் உள்ள தனது வங்கிக் கணக்கின் வழியாக மாற்ற எண்ணி, முதல் தவணையாக 50,000 டாலர் மாற்றியுள்ளார். ஒரு சில மணி நேரங்களில் அவருக்கு அவருடைய வியாபாரியிடமிருந்து மின்னஞ்சல். [...]
காதலன்றி…
என் சாலைகள் உன் துணையின்றி நீள்கின்றன என் நாட்கள் உன் வழி பார்த்து விடிகின்றன என் இரவுகள் உன் அணைப்பின்றி கழிகின்றன என் சுவாசம் உன் வாசமின்றி வாடுகிறது என் கண்கள் உன் பிம்பம் காணாமல் கண்ணீரைப் பொழிகின்றன என் இந்த நீண்ட காத்திருத்தல் எப்போது முடிவுக்கு வரும்? என் காதல் எப்போது உன் மெய் சேரும்? இனியொரு ஜென்மம் உண்டென்றாலும் அதில் உன் துணையாகும் வரம் வேண்டும். இப்படிக்கு காதலன்றி வேறறியாத உன் [...]







