Author Archive
சாதிக்கணும்… இப்பவே!! ஒரு தன்னம்பிக்கைக் கட்டுரை!
மனுசனாப்பிறந்தா எதையாவது சாதிக்கணும்! நாம் என்ன சாதி என்பது முக்கியமில்லை! என்னத்த சாதிச்சோம்’கிறதுதான் முக்கியம்! ஒருநாள் நான் யோசிச்சுப்பார்த்தேன்! சாதனை பண்ணின பசங்கள்லே நிறையப்பேர் நிச்சயமா என்னையை விட முட்டாள் பீஸுக! பொறாமையிலே பேசறான்னு நினைச்சாலும் பரவாயில்ல! ஆனா அதுதான் உண்மை! கொஞ்ச நாளா..மனசுக்குள்ளே.. நான் கூடிய விரைவில் ஏதோ சாதிக்கப்போறேன் என்று பட்சி சொல்லிட்டே இருக்கு! ஒருநாள், தயங்கி, தயங்கி என் மனைவிடம் சொன்னேன்! அவங்களுக்கு நான் சொன்னது ரொம்ப நேரம் புரியல.. ”..ம்! நான் ஏதாவது சாதிக்கணும்! நீ மட்டும் [...]
சில்லறை வணிகம் – அந்நிய முதலீடு
பல மாதங்களாக விவாதிக்கப்படும் இந்தத் தலைப்பு, இப்போது சூடு பிடித்துள்ளது. அந்நிய நிறுவனங்கள் எவ்வளவு முதலீடு செய்யும்? முதல் மூன்றாண்டுகளில் ஏறக்குறைய பதினாறாயிரம் (16,000) கோடி ரூபாய். இந்த முதலீட்டை டாட்டா, பிர்லா, அம்பானி போன்ற இந்திய பெரும் பணக்காரர்கள் செய்ய இயலாதா? இந்தத் தொகை இந்திய அரசாங்கம் அலைக்கற்றை மற்றும் நிலக்கரி உரிமங்களில் வீணடித்த அல்லது தனியார் துறைக்கு தாரை வார்த்த தொகையில் பத்தில் ஓரு பங்கே. அயல் நாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருப்பதாக கூறப்படும் கருப்புப்பணத்தின் [...]
எங்க ஊர் : “மதுரை”
மதுரை என்றவுடன் பொதுவாக அனைவர் நினைவிலும் வருவது மல்லிகைப் பூவாக இருக்கும். அல்லது மல்லிகைப் பூ போன்ற இட்லியாக இருக்கும். ஆனால், மல்லியை விட, மரிகொழுந்து புகழ் பெற்றது என்பது அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. மிகவும் தொன்மையான நகரம் – மதுரை. பாண்டிய மன்னரின் தலைநகராக இருந்து வந்துள்ளது, பின்னர், நாயக்கர்களால் ஆளப்பட்டுள்ளது என்பது போன்ற சரித்திர, பூகோள தகவல்கள் எல்லாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்! 12(௧௨)ஆம் நூற்றாண்டில் பாண்டியர்களால் கட்டப்பட்ட மீனாட்சி அம்மன் கோவில் [...]
திருச்செந்தூர் – நிலத்தடி நீர் கொள்ளை – ஸ்பெஷல் ரிப்போர்ட்
திருச்செந்தூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தாலுக்காகளில் 7,817 ஹெக்டேர் பரப்பளவு விவசாய நிலங்கள் உள்ளது. விவசாயத்திற்கு நிலத்தடி நீரும், தாமிரபரணி ஆறும் தான் நம்பிக்கை. ஆழ்துளை குழாய்கள் மூலம் தண்ணீர் எடுத்து விவசாயத்திற்கு பயன்படுத்துகிறார்கள். கூடவே, திருச்செந்தூர் முழுமைக்கும் குடிநீரும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இப்படித்தான் வழங்கப்படுகிறது.அணைகளில் போதிய தண்ணீர் இல்லாதது,பருவ மழை பொய்த்து போனதும் தற்போது குடிநீர் பஞ்சம் உருவாகும் அளவிற்கு இயற்கை சூழல் மாறியுள்ளது. இந்த நிலையில் திருச்செந்தூர் அருகே ஆறுமுகநேரியில் ஒரு தனியார் கெமிக்கல் [...]
சாப்பாடு : புத்தூர் ஜெயராமன் கடை
காத்திருத்தல் ரொம்பவும் கொடுமை. ஆனால், வாழ்வில் சுவையான அனுபவங்களைப் பெரும்பாலும் காத்திருந்தே பெற வேண்டியிருக்கிறது. இதுவரை என்னென்ன காரணங்களுக்காகவோ காத்திருக்க நேர்ந்திருக்கிறது. என்றாலும், புத்தூர் அனுபவம் உள்ளபடியே வித்தியாசமானது – ரசமானது! சிதம்பரம் – சீர்காழி இடையேயுள்ள சின்ன கிராமம் புத்தூர். கொள்ளிடத்திலிருந்து கூப்பிடுதூரத்தில் இருக்கிறது. இந்த ஊரிலுள்ள ஒரு “கூரைக்கட்டு சாப்பாட்டுக் கடை’யில் அசைவச் சாப்பாடு ரொம்பவும் பிரசித்தம் என்றும் ஆனால், மதுரை வீரனே வந்தாலும் காத்திருந்தால்தான் அங்கு சாப் பிட இடம் கிடைக்கும் என்றும் [...]
’காமெடி’ கருணாநிதி
கருணாநிதி மீண்டும் இலங்கைத் தமிழர்களைக் காக்க வந்த அவதார முகமூடியை அணிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார். தனி ஈழமே தீர்வு என்கிறார். டெஸோ மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்கிறார். தமிழர் நலனுக்காக தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அளிக்கத் தயார் என்கிறார். இன்னும் என்னென்வோ அள்ளி விடுகிறார். கடலில் தூக்கி எறிந்தால் கட்டு மரமாக மிதப்பேன் என்ற உச்சபட்ச காமெடிக்கு சற்றும் சளைத்ததல்ல இந்த காமெடிகள். பொதுவாக கருணாநிதியைப் பற்றி ஒரு கருத்து சொல்வார்கள். அவர் எதிர்க்கட்சியிலிருந்தால் தமிழ் மக்கள் நலனுக்காக ஓங்கிக் [...]
குறும்படம் எடுப்பது எப்படி?
தலைப்பில் ஒரு சிறிய தவறு இருக்கிறது! இப்படித்தான் குறும்படம் எடுக்கவேண்டும் என்று வரையறை எல்லாம் கிடையவே கிடையாது. இருந்தாலும், குறும்படம் ஏழு நிமிடங்களுக்கு மேல் இருந்தாலோ, கதைமாந்தர்கள் ஐந்து பேருக்கு மேல் இருந்தாலோ, அதை குறும்படம் என்று சொல்ல முடியாமல், நெடும்படம் என்று பயமுறுத்த வாய்ப்பிருக்கிறது. அப்படிப்பட்ட குறும்-நெடும்படங்களை எடுக்கும் ஆசாமி நீங்கள் என்றால், கீழே சொல்லப் பட்டிருப்பவை உங்களுக்கு உதவியாக இருக்கலாம். குறும்படம் எடுப்பதற்கு படப்பிடிப்பு, படத்தொகுப்பு, ஒலிப்பதிவு, இசை என்று நான்கு முதன்மையான படிமுறை [...]
திருச்செந்தூர் ரயில் நிலையம்
திருச்செந்தூர் ரயில் நிலையத்தின் எழில் மிகு தோற்றம். இரவில் வந்து செல்லும் பயணிகளுக்கு மின்வெட்டின் போது இயற்கை வெளிச்சமே (?!) போதும் என்ற உயர்ந்த எண்ணத்தில் செயல்படும் ரயில் நிலைய நிர்வாகிகளுக்கு பாராட்டுகள்! – வழக்கறிஞர் எஸ். கிரீஷ்குமார் திருச்செந்தூர்
கருணாநிதியின் (வழக்கமான) நாடகம்
இலங்கையில் நிகழ்ந்த தமிழர்களின் இனப்படுகொலையைக் கண்டித்து ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் அமெரிக்கா கொண்டு வந்திருக்கிற இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களிக்கப் போகிறதா, இல்லையா என்பது இன்னமும் முடிவாகத் தெரியாத நிலையில் தமிழகத்தில் ஆட்சியிலிருக்கும் அ.தி.மு.க. உட்பட அனைத்துக் கட்சிகளும் அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஒரு மனதாக வேண்டுகோள் விடுத்திருக்கின்றன. முதல்வர் ஜெயலலிதா இது தொடர்பாக பிரதமருக்கு 2 கடிதங்களை எழுதியிருக்கிறார். இந்நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு [...]
Power கட்டு.. கொலவெறி.. கொலவெறி!
ஹாய் ப்ரெண்ட்ஸ்.. ஐயாம் ரைட்டிங்… எ லெட்டர்… Sad லெட்டர்.. அன்ஹேப்பி லெட்டர்.. Why this Power cut-u Power cut-u Power cut-u di… Why this Power cut-u Power cut-u Power cut-u di… ஸ்பெல்லிங் Correct?! Why this power cut-u power cut-u Power cut-u di … லிஸ்டன் ப்ளீஸ்.. Why this power cut-u ……………………. aaaa di … டிஸ்டன்ஸூல ஹவுஸூ.. ஹவுஸூ… வொர்க்கிங் so [...]
அம்புலி – 3D
டேய் நான் அம்புலி போனேன் அம்புலியா? ஆமாண்டா தமிழோட முதல் 3D படம் அப்ப மை டியர் குட்டிச்சாத்தான்? அதெல்லாம் 2D ல எடுத்து அப்புறம் மாத்தினது. இது தான் 3D காமரால எடுத்த முதல் படம் கதை? பழசு தாண்டா . ஊருக்குள அந்தப் பக்கமா போன பேய் அடிச்சு சாப்பிடுடும்னு பழைய பிட்டு . யார் படம்டா இது? ஓர் இரவு படத்துல வந்த அதே டீம். அந்த படத்துல தயாரிப்பாளர், இயக்குநர், இசை, [...]
ஆசிரியை கொலை – யார் குற்றவாளி?
அப்பாவி ஆசிரியை ஒருவரின் உயிரையும், இளம் மாணவன் ஒருவனின் எதிர்காலத்தையும் இனி யார் தர முடியும்? வாழ்வியல் சுதந்திரம் தராமல், அறிவை அள்ளி அள்ளி ஊட்டும் இந்தச் சமூகத்திற்கு இதுவும் தேவை இன்னமும் தேவை. சென்னை பாரிமுனை அரண்மனைக்கார தெருவில் செயின்ட் மேரீஸ் மேல்நிலை தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் (வயது 15 ), வேதியியல் மற்றும் இந்தி பாடம் எடுக்கும் ஆசிரியை உமா மகேஸ்வரி (வயது 39) யை [...]
தோனி
இரவு 10.30 மணிக் காட்சிக்கு டிக்கெட் வாங்கி நானும் என் நண்பனும் உள்ளே சென்றோம். தியேட்டரில் ஆபரேட்டரையும், டிக்கெட் கிழித்தவரையும் சேர்த்தும் மொத்தமே 45 பேர் . பரவாயில்லை . நந்தலாலா 20 பொக்கிஷம் 30 .யுத்தம் செய் 35 … அந்த வரிசையில் ரொம்பவே அதிகம் தான்.. கதை என மகேஷ் மஞ்சரேக்கர் பெயரையும் ; திரைக்கதை வசனம் என ஞானவேல் பெயரும் போட்டு ‘பிரகாஷி’க்கிறார் இயக்குனர் . Shikshanacha Aaicha Gho (Marathi: शिक्षणाच्या आईचा घो) என்ற மராத்திய படத்தின் தழுவல் தான் ’தோனி’. படத்தின் [...]
என்ன தான் சொல்லுங்க..ஆம்பிளைப் பசங்க லூசுதான்!
‘கமர்கட்’ எழுதிய “ஆம்பிளைப் பசங்க சூப்பர் தான்.. ஏன் என்றால்…” கட்டுரை வெளியானது. உடனே அதற்கு எதிர்க்கட்டுரை வந்து விட்டது. இந்தா பு(ப)டிச்சுக்குங்க… அஞ்சு நாள் லீவுக்கு வெளியூர் போறதா இருந்தாலும் அதுபத்தி கடைசி நிமிஷம் வரைக்கும் அக்கறையில்லாம சோம்பேறித்தனமா ஒக்காந்திருந்துட்டு கடைசி நிமிஷத்துல போட்டுருக்கற ஒரே ஒரு ஜீன்ஸோட ஊருக்குப் போயி சுத்தியிருக்கறவங்களையும் சேர்த்து நாறடிச்சிட்டு நிக்கிற கண்ராவி குணம் பெண்களுக்கு இல்லை. ட்ராவலுக்கு நாலுநாள் முன்னாடியே நீட்டா ப்ளான் பண்ணி வேளாவேளைக்குத் துணிமணி எடுத்துக்கிட்டுப் [...]
ஆம்பளப் பசங்க தான் சூப்பர்.. ஏன் என்றால்…
என்ன தான் சொல்லுங்க..ஆம்பிளைப் பசங்க தான் சூப்பர்.. காரணம் வேணுமா? இந்தா பு(ப)டிச்சுக்குங்க… அஞ்சு நாள் லீவுக்கு வெளியூர் போறதா இருந்தாலும் ஒரே ஒரு ஜீன்ஸ் பேண்ட் போதும். அஞ்சு வேளைக்கு ஐநூறு டிரஸ் அப்படீன்ற பேச்சே இல்லை. யாரா இருந்தாலும் அரை நிமிஷத்துக்கு மேலே ஃபோனிலே பேசுற பழக்கமே கிடையாது. எத்தனை வருஷமா ஆனாலும் மொத்த முடியும் கொட்டி வழுக்கையாகுற வரைக்கும் அதே ஹேர் ஸ்டைல் தான்! 50 பேருக்கு டிரஸ் எடுக்குற வேலையா இருந்தாலும் [...]
எது நாகரீகம்?
எது நாகரீகம்? இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொன்னாலும் பொருந்தும். சிந்து சமவெளியில் தொடங்கி இன்றளவும் தொடர்கிறது நாகரீகம்.இன்று சொல்லும் பதில் நாளை தவறாகி விடலாம். அது ஒரு மாற்றத்தின் கட்டாயத்தில் உள்ளது. தவறெனக் கொள்ளப்படுவது சரியாவதும், சரி எனக்கொண்டது தவறாவதும் வாடிக்கை ஆகிவிட்டது..1950-களில் கடுக்கன் போடும் ஆண்கள் மத்தியில் போடாதவர்கள் குற்றவாளிகள் போல் பார்க்கப்பட்டனர். இன்றும் அதே நிலைமை. என்ன ஒரு சிறு மாற்றம் கடுக்கன் STUD ஆகி உள்ளது. ஒரு குவளை அளவு அரிசியில் [...]
நாம் மட்டும்… – கவிதை
இரவுகளை உறங்கவைத்து கதிரவனை எழுப்பிவிட்டு பேசிக் கொண்டிருந்தோம் நாம் மட்டும்! தெரிந்ததும்… தெரியாததும்… புரிந்ததும்… புரியாததும்… சிலநேரம் உளறல் சிலநேரம் கொஞ்சல் சிலநேரம் கோபம் சிலநேரம் மவுனம்… உயிரோடிருந்த தொலைக்காட்சியும் எட்டிப் பார்த்த ட்விட்டரும் சொல்லின உலகச் செய்தியை… நமக்கோ அவை யாவும் வேற்று கிரகச் செய்தியாய்! பசி மறந்தோம் உறக்கம் துறந்தோம் நம்மை மறந்தோம் நாம் ஆனோம்! ஆம்…’நாம்’ ஆனோம்! – ஆர். சிவக்குமார்
கருணாநிதியின் நீலிக்கண்ணீர்
சமீபத்தில் நடைபெற்ற தனது குடும்பக் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் பேசும்போது,”பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், குஜராத்தில் நிகழ்ந்தது போல நாடு முழுக்க சிறுபான்மை வகுப்பைச் சார்ந்தவர்கள் தாக்கப்படுவார்கள். பாபர் மசூதி இடிப்பு போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறும். எனவே, சிறுபான்மையினர் நன்மைக்காகவும் நாட்டின் நலனுக்காகவுமே திமுக இன்னமும் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறோம்” என்று உணர்ச்சி பொங்க கூறியிருக்கிறார் கருணாநிதி. நாடகமாடுவதும், ஏமாற்றுவதும் கூட பல்வேறு கலைகளில் ஒரு வகைதான். கருணாநிதி, கலைஞர் அல்லவா? அதனால் மேற்கூறிய 2 கலைகளையும் மிகவும் சிறப்பாகச் செய்து காட்டியிருக்கிறார். பொதுக்குழு கூட்டத்தில் கலந்துக் கொண்ட தி.மு.க. வினர் வேண்டுமானால் கேணைகளாகயிருக்கலாம். அதனால் கருணாநிதி கேழ்வரகில் நெய்வடிகிறது என்று கூறினால் கூட அவர்கள் நம்பலாம். ஆனால், பொதுமக்கள் புத்திசாலிகள். அதனால் அவரது ஏமாற்று வேலைகளை அவர்கள் இனி ஒரு காலமும் நம்ப மாட்டார்கள். அயோத்தியில் இருந்த பிரச்னைக்குரிய கட்டிடம் 1992 டிசம்பர் 6 அன்று இடிக்கப்பட்டது. இன்று முதலைக் கண்ணீர் வடிக்கும் கருணாநிதி அதன் பின்பு தான் பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்தார். இன்று சிறுபான்மையினர் நலன் என்று கூறும் கருணாநிதி 1999ல் ஏன் பா.ஜ.க.வோடு கூட்டணிசேர்ந்தார்? 2002 பிப்ரவரி மாதம் குஜராத் கலவரங்கள் நிகழ்ந்தன. ஆனால், 2004ல்தான் கருணாநிதி பா.ஜ.க.கூட்டணியை விட்டு வெளியேறினார். கலவரங்கள் நிகழ்ந்த பின்னும் சுமார் 2 வருடங்கள் பா.ஜ.க.வோடு கொஞ்சிக் குலாவிக் கொண்டு தானிருந்தார் கருணாநிதி. குஜராத் வன்முறைகள் நிகழ்ந்தவுடனேயே பீஹாரில் பாஜ.க.வோடு கூட்டணியிலிருந்த ராம்விலாஸ் பஸ்வான் உடனடியாக கூட்டணியை விட்டு வெளியேறினார். ஆனால், கருணாநிதி தனது மருமகன் முரசொலி மாறன் மத்திய அமைச்சர் பதவியில் நீடிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் அட்டை போல [...]
ராட்சஷன் கடத்திய தங்கை – கொங்கு நாட்டுபுறக் கதை
ஒரு ஊர்ல மூணு அண்ணன்மாருங்க இருந்தாங்களாம் அவங்களுக்கு ஒரு தங்கச்சி இருந்தாளாம். அந்த அண்ணமாருங்கள்ல பெரிய அண்ணன் ரொம்ம்ம்ம்ப நல்லவனாம். அதனால அவன எல்லாரும் பைத்தியக்காரன்னு சொல்லுவாங்க. ஒரு நாள் ஒரு ராட்சஷன் அவங்கூட்டு வழியா போகும் போது தங்கச்சிக்காரிய பாத்து அவளைத் தூக்கீட்டு போயிட்டானாம். காட்டுக்கு போன அண்ணங்காரங்க திரும்பி ஊட்டுக்கு வந்து பாத்தா ஆத்தாகாரி அழுதுட்டு இருந்தாளாம், என்னான்னு கேட்டா கதைய சொன்னாளாம். சின்ன அண்ணனுக ரெண்டு பேரும் தங்கச்சிய காப்பாத்தா கெளம்புனானுகளாம் அப்ப [...]
மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்! – ’கரையான்’
காடுகள் நாட்டின் கண்கள். வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம். – இப்படி நிறைய slogan-களை நாம் பார்த்து விட்டோம். எத்தனையை செயல்படுத்தி இருக்கிறோம்? மரம் வளர்ப்பது நல்ல விசயம் தான், கேட்பதற்கு நன்றாக தான் இருக்கிறது வளர்பதற்கு நேரமோ இடமோ இல்லை என்பது தான் பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கிறது. நாம் அனைவரும் அறிந்தது தான். புவி வெப்பமாதலுக்கு முதன்மையான காரணம், பசுமை கூட வாயுக்களின் வெளியேற்றம், அவற்றில் முக்கியமாக கார்பன்-டை-ஆக்சைடின் விகிதாச்சார அளவு அதிகரிப்பது. ஒளிர்சேர்க்கை செய்யும் [...]






