Author Archive
மனோஜ், ஊர்மிளா, பொக்க, மற்றும் நான்!
மனோஜ் மாதிரியான ஆட்களை நீங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் சந்தித்து தான் இருப்பீர்கள்.மனோஜ்?பாக்யராஜின் அறிவிக்கப்படாத வாரிசாக அதே மாடல் சோடாப்புட்டி கண்ணாடி. ஒரு பக்கத் தோளை சாய்த்தவாறு கோணலான நடை. பார்த்தவுடன் நூறு சதம் யாருக்குமே கிறுக்கன் என்று நினைக்க வைக்கும் பாவனை. பேந்தப் பேந்த முழிப்பு! உதட்டைச் சுளிப்பான்.ஆனால் அவனொரு புத்திசாலி. பெயரறியா தேசத்தின் எழுத்தாளர்களை எல்லாம் தேடிப் (பி)படித்துவிட்டு வந்து சொல்வான்.சாதாரண விஷயத்தைக் கூட சாதாரணமாக சொல்லவே மாட்டான். “அந்த மேட்டர் என்னா தெரியுமா” [...]
ஆதவன் சிறுகதைகள் – ஒரு பார்வை
ஒரு எழுத்தாளனின் படைப்புகளைத் தனித்தனியாக வாசிப்பது தரும் அனுபவம் வேறு. ஒரே மூச்சில் வாசிக்கும் போது ஏற்படும் அனுபவம் வேறு. ஆதவன் எழுதிய 60 சிறுகதைகளின் முழுத்தொகுப்பு இந்நூல். அவற்றில் பத்து சிறுகதைகளை நான் முக்கியமானவையாகவும் ஒரு இலக்கிய வாசகன் அவசியம் வாசிக்க வேண்டியவையாகவும் கருதுகிறேன். அவை : சிவப்பாக உயரமாக மீசை வச்சுக்காமல் புதுமைப்பித்தனின் துரோகம் அப்பர் பெர்த் இன்டர்வியூ லேடி ஒரு பழைய கிழவர்,புதிய உலகம் முதலில் இரவு வரும் சினிமா முடிந்த பிறகு [...]
பலூன் – கோகுல் பிரசாத்
அந்த சிறிய ஊருக்கு அது நிச்சயம் பெரிய ரயில் நிலையம்தான். தண்டவாளங்களில் எல்லாம் வெயில் பரவி தாமிரமாகியிருந்தது. என்னை ஏற்றிக் கொண்டுச் செல்ல வேண்டிய ரயில் எதிர்புறம் இருக்கும் பிளாட்பார்மில் வரும் என்றார்கள். மொத்தமே இரண்டு பிளாட்பார்ம்கள்தான். ஒன்றரை மணி நேரம் இருந்தது. ரயில் வர இன்னும் தாமதமாககூடும். ஒரே ஒரு கடை தெலுங்கு தினசரிகளை தொங்க விட்டு கொண்டு படிப்பாரற்று அனல்காற்றில் சுட்டுக் கொண்டிருந்தது. எனக்குத் தெலுங்கு வாசிக்க தெரியாது. சிமெண்ட் படிகளில் ஏறி மெதுவாக [...]
காந்தியைப் போற்றுவோம் ~ தியாகிகள் தின ஸ்பெஷல் கட்டுரை – கோகுல்பிரசாத்
ஜனவரி 30. நாம் வருடந்தோறும் இரண்டு நிமிட அஞ்சலியோடு முடித்துக்கொள்ளும் தினம். மகாத்மா காந்தியை கொடியன் கோட்சே சுட்டுக்கொன்ற தினமே தியாகிகள் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. எத்தனையோ தியாகிகள் இத்திருநாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்திருக்க காந்தியை மட்டும் முன்னிறுத்துவது எப்படி நியாயமாகும் என்பதே காந்திய எதிர்ப்பாளர்கள்(?!) முன்வைக்கும் முதல் குற்றச்சாட்டு. ஏன் காந்தியை மட்டும் முன்னிறுத்துகிறோம்? சுபாஷோ, பகத்சிங்கோ தியாகி இல்லையா? காந்தி ஒரு குறியீடு. அவர் மூலம் பிற தியாகங்களையும் பண்புகளையும் நாம் மீட்டெடுக்க உதவும் கருவி அவர். [...]
The Bicycle Thieves – சுடச்சுட உலக சினிமா விமரிசனம்
உலகின் சிறந்த பத்து படங்களை எவர் தேர்வு செய்தாலும் இதற்கு நிச்சயம் ஓர் இடமுண்டு. Neo-realistic வகையை சார்ந்த இப்படம்,1948 இல் வெளியானது திருடன் ஏன் திருடுகிறான்? வாழ்வில் திருடாமலோ திருட்டுடன் சம்பந்தபடாமலோ வாழ்பவர்கள் மிகவும் குறைவு. மனம் எண்ணற்ற விசித்திரங்களை கொண்டது.அதற்கு சரியென்றோ தவறென்றோ ஒன்றுமில்லை. மாட்டிக் கொள்ளாத வரை எதுவும் தவறில்லை.இங்கு எதுவும் குற்றமில்லை. தவறு செய்ததை ஒப்புகொண்டால் மன்னிக்கபடமாட்டாய், தண்டிக்கப்படுவாய் என்கிறார் CONFUCIUS. தமிழில் வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன் திரைப்படம் இந்த படத்தில் [...]
சொல் என்றொரு சொல்
சொற்களை உபயோகிப்பது எளிது. உருவாக்குவது கடினம் எஸ்.ராமகிருஷ்ணன். தமிழில் சுமார் மூன்று லட்சம் வார்த்தைகள் உள்ளனவாம்.ஆங்கிலத்தில் எட்டு லட்சம் வார்த்தைகள். இன்று எந்த ஆங்கில அகராதியை வாங்கினாலும் குறைந்தது ஒரு [...]





