வரலாறு
எங்க ஊர் : “மதுரை”
மதுரை என்றவுடன் பொதுவாக அனைவர் நினைவிலும் வருவது மல்லிகைப் பூவாக இருக்கும். அல்லது மல்லிகைப் பூ போன்ற இட்லியாக இருக்கும். ஆனால், மல்லியை விட, மரிகொழுந்து புகழ் பெற்றது என்பது அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. மிகவும் தொன்மையான நகரம் – மதுரை. பாண்டிய மன்னரின் தலைநகராக இருந்து வந்துள்ளது, பின்னர், நாயக்கர்களால் ஆளப்பட்டுள்ளது என்பது போன்ற சரித்திர, பூகோள தகவல்கள் எல்லாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்! 12(௧௨)ஆம் நூற்றாண்டில் பாண்டியர்களால் கட்டப்பட்ட மீனாட்சி அம்மன் கோவில் [...]
கங்காரு நாட்டின் கதை கேளு #4 – சிட்னி முருகன் ஆலயம்
கங்காரு நாட்டின் கதை கேளு தொடரின் இந்தப் பகுதியில் சிட்னி முருகன் ஆலயம் குறித்த பகிர்வைத் தரலாம் என்று நினைக்கின்றேன். ஆஸ்திரேலிய நாடு மதச்சுதந்திரத்தை சக சமூகத்தினருக்குத் தொல்லை தரா வண்ணம் கைக்கொள்வதில் தாராளக் கொள்கையைக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் ஈழத்தில் இருந்தும், தமிழகத்தில் இருந்து புலம்பெயர்ந்த நம் தமிழர்கள் இந்த நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் இந்து ஆலயங்கள் அமைத்து ஆன்மீக, சமூகப் பணிகளுக்கான நிலைக்களன்களாக இவற்றைப் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறானதொரு தோற்றப்பாட்டில் எழுந்ததே நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் [...]
தாயின் மணிக்கொடி….
இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக ஆண்டுக்கு இருமுறை கோலாகலமாக தேசியக் கொடி ஏற்றி இறக்கப்படுகின்றது. பொதுவாகவே உலக நாடுகள் எல்லாம் ஒரு முறை, அதாவது அந்தந்த நாடு சுதந்திரம் பெற்ற பொன் நாளை மட்டும் கொண்டாடி மகிழ்கின்ற நிலைதனையும், ஆனால் இந்தியத் திருநாட்டில் மட்டும் சுதந்திர தினம் என்றும் குடியரசு தினம் என்றும் இரு வெவ்வேறு நாட்களில் கொண்டாடுகிற நிலைதனையும் பெற்றிருக்கிறோம் என்பதை எல்லோரும் அறிவோம். ஆனால், ஏன்? இப்படி இரண்டு நாட்கள் கொண்டாட வேண்டும்? எதற்காக? எப்போதிருந்து? என்பதற்கான [...]
கங்காரு நாட்டின் கதை கேளு #3
ஆஸ்திரேலிய நாட்டின் வரலாறு, சமூக, நடப்பு வாழ்வியல் குறித்த இந்தத் தொடரில் இந்த வாரம் இடம்பெறும் அம்சம் Australia Day எனப்படும் நிகழ்வு குறித்த பகிர்வு. ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 26 ஆம் திகதி இந்தியக் குடியரசு தினம் மட்டுமல்ல ஆஸ்திரேலிய நாட்டவருக்கும் இந்த நாட்டைப் பெருமையோடு கொண்டாடும் ஒரு நாளாகக் கொள்ளப்படுகின்றது. இந்த நாள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டு மத்திய, மாநில அரசுகள் குடிமக்களையும் இணைத்துக் கொண்டாடும் நாளாக அமைத்திருக்கின்றார்கள். வாண வேடிக்கைகள், கலை நிகழ்ச்சிகள், களியாட்ட [...]
கங்காரு நாட்டின் கதை கேளு #2
(இந்தத் தொடரின் பாகம் 1) நன்றாகக் கறுத்துத் திரண்ட தேகம், உப்பிய முகம், நீண்டு நெட்டையான உயரம், அலட்சியமான பார்வையா அல்லது ஏதுமறியா அப்பாவித்தனத்தின் வெளிப்பாடா என்று கண்டுணரமுடியாத முகபாவம் இவையெல்லாம் கலந்ததொரு தோற்றம். தமிழகத்த்திலோ ஈழத்திலோ பழமையை மாறாக் கிராமம் ஒன்றில் பிறந்த வளர்ந்து வெயில் குடித்த மனிதரை வர்ணிக்கின்றேன் என்று நினைத்துவிடாதீர்கள், ஆஸ்திரேலியா என்ற உலகின் மிகப்பெரும் நிலப்பரப்பைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகத் திகழும் மண்ணில் பிறந்த பூர்வகுடி மனிதரைத் தான் சொல்கின்றேன். உலகின் ஏழு கண்டங்களில் ஆஸ்திரேலியா மட்டுமே கண்டமாகவும் நாடாகவும் திகழும் [...]
கங்காரு நாட்டின் கதை கேளு #1
வாசகர்களுக்கு முதல் வணக்கம். நான் வாழும் Australia நாட்டின் செய்திகள், தகவல்கள் தாங்கிய பகிர்வுகளை அவ்வப்போது வழங்கலாம் என்று எண்ணியுள்ளேன். ஒரு குறிப்பிட்ட விடயம் இல்லாது இந்த நாட்டின் பல்வேறுபட்ட சமாச்சாரங்களின் பகிர்வாக இது அமையவுள்ளது. அந்த வகையில் என் முதற்கட்டுரையை இப்போது உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன். Australia வில் தமிழ் இந்த நாட்டைப் பொறுத்தவரை இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இருந்து நிரந்தர வதிவுடமையில் இங்கு வந்த தமிழர்களோடு, Australia வின் அயல் நாடுகளான மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் [...]
தமிழகத் தொல்லியல் துறை தொலைந்து போகக்கூடாது ! ?
கங்கை கொண்ட சோழபுரம் சோழப் பேரரசின் தலைநகராகச் சுமார் 250 ஆண்டுகள் பெருமையுடன் விளங்கியது என்பது வரலாறு நமக்குத் தெரிவிக்கும் செய்தி.இத்துணை சிறப்புமிக்க நகரம் தற்போது எங்கே? கி.பி. 13ஆம் நூற்றாண்டில் புகழும் கீர்த்தியும் பெற்று விளங்கிய பாண்டிய மன்னர் சடையவர்மன் சுந்தர பாண்டியன் (கி.பி. 1251-68) படையெடுப்பினால் இந்நகரம் அழிவுற்றிருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் தோண்டித் துருவியெடுத்த தகவல்கள் மூலம் அறிகிறோம். சுந்தரபாண்டியனுக்குப் பின் ஆட்சி புரிந்த மாறவர்மன் குலசேகரன் (1268-1310) மூன்றாம் இராஜேந்திரன் என்ற கடைசி சோழ மன்னரைக் கி.பி. 1279இல் தோற்கடித்துச் சோழராட்சி மறைந்திடச் [...]





