அரசியல்
மேட்டர் அம்புட்டுத்தான்! – ஆஸ்திரிய நாட்டு தபால் தலை உண்மை நிலவரம்!
திமுக தலைவர் மு.கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய தமிழ்ப்பணி & சமுதாயப்பணி (?!) ஆகியவற்றைப் பாராட்டி ஆஸ்திரிய நாட்டு அரசாங்கம் அவருடைய உருவப்படம் பொறித்த தபால் தலையை வெளியிட்டுள்ளதாக ’விடுதலை’ என்ற பெயரில் வெளியாவதாகக் கூறப்படும் நாளிதழ் ஒன்றும், அதனை தனது முதல் பக்கத்தில் ‘முரசொலி’ நாளேடும் வெளியிட்டு புலகாங்கிதப்பட்டன. இது குறித்து ஏற்கனவே கட்டுரை.காம் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. அந்தக் கட்டுரையில் தெள்ளத் தெளிவாக மேற்படி ஆஸ்திரிய நாட்டில் யார் வேண்டுமானாலும் புகைப்படத்தைக் கொடுத்து [...]
கெண்டகி கர்னல் – ஆமாம்.. ஆனா இல்ல்ல்ல்ல்லை!
ஒரு வழியாக கெண்டகி கர்னல் விருது வழங்கப்பட்டிருப்பதாக மின்னஞ்சல் வந்து விட்டது. From : info@kycolonels He is listed on EO # 2012-106, dated 2-10-12, as M. K. Stalin, Anna Arivalayam, 367/369, Anna Salai, Teynampet, Chennai, India 600018. Hope this helps. He was made a colonel. we just never got his name so he gets no mail from us. [...]
கெண்டகி கலோனல் அலுவலகத்திலிருந்து…
கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திமுக தலைமைக் கழகம் சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டு, அது பத்திரிகைகளிலும், இணைய தளங்களிலும் செய்தியாகவும் வெளியாகியிருந்தது. ”மு.க. ஸ்டாலினுக்கு, அமெரிக்க நாட்டின் கென்டக்கி மாகாணத்தின் விருதான, “கென்டக்கி கர்னல்’ விருது, அம்மாகாண கவர்னர் ஸ்டீவன் பெஷேரால் வழங்கப்பட்டுள்ளது. ஸ்டாலினின் பொதுமக்கள் சேவையை பாராட்டி வழங்கப்பட்டுள்ள இந்த விருது குறித்து தகவல் அளித்து, வாழ்த்துச் செய்தியும், கென்டக்கி மாகாண கவர்னரின் செயலரும், உலக அமைதிக்கான தூதருமான ஜார்ஜ் ரீப், இ-மெயில் அனுப்பியுள்ளார். அந்த [...]
குண்டு வெடிப்புகள் கற்றுத் தருமா பாடம்?
நாட்டில் குண்டு வெடித்து விட்டால் போதும், நம்ம சாட்டிலைட் சானல்களுக்கு அன்று தான் தீபாவளி, பொங்கல், கிறுஸ்துமஸ், ஈத் பண்டிகை எல்லாமே! வீட்டில் சும்மா இருக்கும் நான்கு பேரைக் கூப்பிட்டு உட்கார வைத்து கருத்து கேட்க ஆரம்பித்து விடுவார்கள். அவர்களும் என்னவோ நாசா சயிண்டிஸ்டுகள் ரேஞ்சில் கருத்துகளை அள்ளித் தெளிப்பார்கள். அடேய்.. அமெரிக்காவிலே 9/11-க்கு அப்புறம் தான் பிரச்னையே அதிகம். “அமேரிக்காவிலே நைன் இலெவனுக்கு (9/11) அப்புறம் ஒரு பிரச்னை கூட வரலை தெரியுமா?” என்பது தான் இந்த [...]
ஆசிரியர் தகுதித் தேர்வின் சமூகச் சிக்கல்
தமிழ்நாடு முழுவதும் நடந்துகொண்டிருக்கும் பள்ளி மாணவர்க்கான அரையாண்டுத் தேர்வுப் பணிகளை எனது பள்ளியின் துணை முதல்வர் எனும் பொறுப்பில் நான் பார்த்துக் கொண்டிருக்கும் போது, பயிற்சிப் பணிக்கு, ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளிலிருந்து வந்திருக்கும் ”மாணவ ஆசிரியர்”களிடம் பேசிக்கொண்டிருந்தேன். பயிற்சி முடித்து விடை பெறும் ஆசிரிய-மாணவி ஒருவர், ஆசிரியர்கள் எல்லாருக்கும் இனிப்பு & காரம் கொடுத்துக் கொண்டு வந்தவர் எங்கள் முதல்வரிடம் கொடுத்துக்கொண்டே, “அப்படியே கையெழுத்தும் போட்டுவிடுங்க சார்” என்று சொல்லவும், வழக்கமாக இதற்கெல்லாம் கோபப்படும் அவர் இப்போது [...]
சில்லறை வணிகம் – அந்நிய முதலீடு
பல மாதங்களாக விவாதிக்கப்படும் இந்தத் தலைப்பு, இப்போது சூடு பிடித்துள்ளது. அந்நிய நிறுவனங்கள் எவ்வளவு முதலீடு செய்யும்? முதல் மூன்றாண்டுகளில் ஏறக்குறைய பதினாறாயிரம் (16,000) கோடி ரூபாய். இந்த முதலீட்டை டாட்டா, பிர்லா, அம்பானி போன்ற இந்திய பெரும் பணக்காரர்கள் செய்ய இயலாதா? இந்தத் தொகை இந்திய அரசாங்கம் அலைக்கற்றை மற்றும் நிலக்கரி உரிமங்களில் வீணடித்த அல்லது தனியார் துறைக்கு தாரை வார்த்த தொகையில் பத்தில் ஓரு பங்கே. அயல் நாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருப்பதாக கூறப்படும் கருப்புப்பணத்தின் [...]
நாங்க எல்லாம்….!
அண்மையில் நாளிதழ்களில் வெளியான விளம்பரம். உங்கள் பார்வைக்கு… நாங்க எல்லாம்…..! ரொம்ப நேர்மையானவங்கங்கோ!!
தமிழ்நாடுலு..!
தமிழக அரசில் ஆந்திரர்கள் ஆதிக்கம் – இப்படி ஒரு தலைப்பில் ஏற்கனவே கடந்த ஜனவரி மாதமே நமது கட்டுரை.காம் இதழில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம். ஒரு முக்கிய அரசியல் தலைவரின் வேர் ஆந்திராவைச் சேர்ந்தது. எனவே தான் அவர் அமைச்சரவையில் கூட ஆந்திரர்களுக்கு முன்னுரிமை என்றெல்லாம் பேச்சு சாதாரண மக்களிடம் கூட எப்போதும் அடிபடும். அப்படி ஆரம்பித்த இந்த ’ஆந்திர லாபி’ இப்போது அசைக்க முடியாததாக உருமாறியிருக்கிறது. எந்த அரசு வந்தாலும், போனாலும் இந்த ஆந்திர லாபி [...]
கருணாநிதிக்கு செவ்வாய் கிரக பிரதமர் வாழ்த்து!
கலைஞர் பிறந்த நாள்! இணையத்தில் உலகம் முழுவதும் இருந்து வாழ்த்துச் செய்தி! திமுக தலைவர் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரை வாழ்த்துவதற்கு வசதியாக திமுக மாணவர் அணி சார்பில் துவக்கப்பட்ட இணையதளத்தில் உலக நாடுகள் பலவற்றிலும் இருந்து சுமார் 87,213 பேர் வாழ்த்துச் செய்திகளை பதிவு செய்துள்ளதாக திமுக சார்பில் வெளியான செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மணி, ஆஸ்திரேலியா, சுவீடன், ஈழம் (இலங்கை), நெதர்லாந்து, அயர்லாந்து, சவூதி அரேபியா, துபாய், [...]
ஹிந்துக்கள் மானசரோவர், முக்திநாத் செல்ல மானியம் – முதல்வர் ஜெ!
சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்தில் உள்ள முக்திநாத் ஆகிய புனித இடங்களுக்கு யாத்திரை செல்லும் இந்துக்களுக்கு தமிழக அரசு பயணச் செலவுக்கு மானியம் வழங்கும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சட்டசபையில் இன்று விதி எண் 110ன் கீழ் அவர் தாக்கல் செய்த அறிக்கையில், “ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் இறைவனை காணும் பணி மேற்கொள்வோம்’ என அனைத்து மதத்தினரும் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். கிறிஸ்தவ பெருமக்கள் ஜெருசலம் புனித யாத்திரை மேற்கொள்ளவும், இந்துக்கள் சீனாவில் உள்ள [...]
மீண்டு(ம்) வருகிறார் அலெக்ஸ்!
சட்டீஸ்கரில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் கடந்த 21-ம் தேதியன்று கடத்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன் விரைவில் விடுதலை செய்யப்படுகிறார். சட்டீஸ்கர் மாநில அரசுக்கும், மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தையடுத்து அலெக்ஸ் விடுதலை செய்யப்படுவதாக மாவோயிஸ்ட்டுகள் அறிவுத்துள்ளனர் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன. முன்னதாக பல்வேறு காலகட்டங்களில் கைதாகி சிறையில் உள்ள மாவோயிஸ்ட் ஆதரவாளர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்று மாவோயிஸ்ட்டுகள் கோரிக்கை வைத்திருந்தார்கள். ஆனால் இப்போது அதற்கு பதிலாக மூன்று நபர் [...]
’காமெடி’ கருணாநிதி
கருணாநிதி மீண்டும் இலங்கைத் தமிழர்களைக் காக்க வந்த அவதார முகமூடியை அணிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார். தனி ஈழமே தீர்வு என்கிறார். டெஸோ மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்கிறார். தமிழர் நலனுக்காக தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அளிக்கத் தயார் என்கிறார். இன்னும் என்னென்வோ அள்ளி விடுகிறார். கடலில் தூக்கி எறிந்தால் கட்டு மரமாக மிதப்பேன் என்ற உச்சபட்ச காமெடிக்கு சற்றும் சளைத்ததல்ல இந்த காமெடிகள். பொதுவாக கருணாநிதியைப் பற்றி ஒரு கருத்து சொல்வார்கள். அவர் எதிர்க்கட்சியிலிருந்தால் தமிழ் மக்கள் நலனுக்காக ஓங்கிக் [...]
பொதுநல அறிவிப்புகள்!
மக்களே.. ஸ்டார்ட் ம்ய்ஜிக்! அறிவிப்பு 1 : மத்திய அரசின் சார்பில் ஜாதிவாரியாகக் கணக்கெடுப்பு துவங்கியுள்ளது, இவ்விஷயத்தில் நம் சமூகத்தினர் ஒரு முகத்துடன், நாம் நம்முடைய எண்ணிக்கை பலத்தினை பிரதிபலிக்கின்ற வகையில் அனைவரும் ஜாதிப் பெயர் என்று கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் ”பிராமணர்” என்று குறிப்பிடும்படி அறிவுறுத்தப்படுகின்றனர், நமது உட்பிரிவுகளின் பெயர்களான ஐயர், ஐயங்கார், ராவ். பட்டாச்சார்யார். சிவாச்சார்யார் etc போன்றவற்றைக் குறிப்பிடுவதைத் தவிர்த்து நம் சமூகத்தினர் அனைவரும் தங்களது ஜாதி ”பிராமணர்” என்று மட்டுமே பதிவு செய்யும்படி [...]
மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கோரிக்கை?
கடத்தப்பட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனனை விடுதலை செய்வதற்காக, மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் இரண்டு கோரிக்கைகளை தற்போது விடுத்துள்ளதாக செய்திகள் வந்திருக்கின்றன. 1. போலீஸார் பிடியில் உள்ள 8 நக்ஸலைட்டுகளை விடுதலை செய்ய வேண்டும். 2. Operation Green Hunt எனப்படும் நக்ஸலைட்டுகளுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். – இந்த இரண்டு கோரிக்கைகளையும் நக்ஸலைட்டுகள் விடுத்திருப்பதாக சட்டீஸ்கரில் இருந்து அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் வந்துள்ளன. இந்நிலையில் கடத்தப்பட்ட ஆட்சியரின் விடுதலைக்காக பலரும் நாடெங்கிலும் கோரிக்கையும், அரசின் அலட்சியத்திற்கு கண்டனங்களையும் [...]
சட்டீஸ்கரில் கடத்தப்பட்ட தமிழன்
எம் அடிமைத் தனம் பெரிது , எமைப் பிணைத்திருக்கும் விலங்குகளோ வலிது, பின் உடைத்தெடுக்கும் அடிகள் மட்டும் , எப்படி மெதுவாய்? வலிக்காமல்? – இது ‘கலகக்குரல்’ என்ற தலைப்பில் தனது வலைப்பூவில் அலெக்ஸ் பால் மேனனால் பதியப்பட்டிருக்கிறது. வலைப்பூவின் பெயர் ‘குறைகுடம்’. ஆனால் உண்மையைச் சொல்லப்போனால் அவர் ஒரு நிறைகுடம். அலெக்ஸ் பால் மேனன்… சட்டீஸ்கர் மாநிலத்தில் சுக்மா மாவட்ட கலெக்டராக பணி புரியும் நெல்லையைச் சேர்ந்த ‘அலெக்ஸ் பால் மேனன்’ நேற்று சனிக்கிழமை மாலை [...]
தேவையா இது வைரமுத்து சார்?
தமிழ்த் திரையுலகம் தவிர்க்க இயலாத கவிஞர் வைரமுத்து. மொழியை இசை விழுங்கி வெறும் சப்தங்கள் தான் பிரதானம் என்று திரை இசை ஆகிவிட்ட போதும் கூட, தன்னால் இயன்ற அளவு தூய தமிழ்க் கவிதைகளை திரை இசைகளாக்கி ரசிக்கச் செய்யும் பேராற்றல் மிக்கவர். உண்மையான திறமைசாலி. அதனால் தானோ என்னவோ, ‘கவியரசு’ என்று சான்றோர் அனைவரும் கண்ணதாசனை அழைக்கும் போது தான் அதை விட ஒரு படி உயர்ந்தவன் என்ற தொணியில் ‘கவிப்பேரரசு’ என்று யாரோ கொடுத்த பட்டத்தை [...]
ஹிந்தி அழிந்து விடும்
குஜராத் உயர்நீதிமன்றத்தில் சுரேஷ் கச்சாடியா என்பவர் 2009-ம் ஆண்டில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த வழக்கில் ஹிந்தி மொழி, இந்தியாவின் தேசிய மொழி என்பதால் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பொருள்கள் அடைக்கப்பட்ட பெட்டிகளின் மேல் அப்பொருளினைப் பற்றிய விலை, உள்ளடக்கம், தரம் ஆகிய விவரம் குறித்த தகவல்களை ஹிந்தி மொழியில்தான் அச்சிட வேண்டும். இது தொடர்பான உத்தரவை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பிறப்பிக்க நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என்றும் விண்ணப்பித்திருந்தார். இந்த வழக்கு குஜராத் [...]
வாழ்த்துகிறோம் சந்தானபாண்டியன், DSP!
மார்ச் 27-ம் தேதி, செவ்வாய்க்கிழமை காலை ஒன்பது மணியளவில், தர்மபுரி… மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் விநியோகப்பட்டுக் கொண்டிருந்திருக்கிறார்கள். ஏராளமான மக்கள் விண்ணப்பங்களை வாங்கிக் கொண்டிருந்த போதே, “விண்ணப்பங்கள் முடிவடைந்து விட்டன” என்று சொல்லி கதவைச் சாத்தியிருக்கிறார்கள். அவ்வளவு தான்.. விண்ணப்பங்களை வாங்க வந்தவர்கள் பொங்கி எழுந்து சாலை மறியலில் ஈடுபட ஆரம்பித்து விட்டார்கள். பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று கொண்டிருந்தவர்கள், வேலைக்குச் சென்று கொண்டிருந்தவர்கள், பரிட்சைக்குச் சென்று கொண்டிருந்தவர்கள், மருத்துவமனைக்குச் சென்று [...]
2012 பிராந்திய அரசியல், ராகுல் வீழ்ச்சி, வாரிசு அவலங்கள்
நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தல்களில், தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பிஜேபி இரண்டுமே மக்கள் கணிப்பில் மோசமான நிலையில் இருப்பது தெளிவு. 690 மொத்த இடங்களில், இந்த 2 “தேசிய”க் கட்சிகளும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கை 268! உத்திரப்பிரதேசக் கொடுமை பற்றி சொல்லவே வேண்டாம்! பிஜேபி-47, காங்-28, கூட்டினால் கூட, துரத்தப்பட்ட மாயாவின் பி.எஸ்.பி வென்றதில் (155) பாதி கூட தேறாது. 2007-லும் இதே கதை தான். இனி எந்தக் காலத்திலும், தனிப்பெரும்பான்மையில் இந்த 2 [...]





