இணையத் தமிழ் கட்டுரை உலகம்

சினிமா

விஸ்வரூப பிரச்னை – கமல்ஹாசன் அறிக்கை

vish

கமல்ஹாசன் நடித்து, தயாரித்திருக்கும் ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவு படுத்தும் காட்சிகள் இருப்பதாகக் கூறி ஒரு சில மத அமைப்புகள் பிரச்னை கிளப்பியுள்ளன.  படத்திற்கு தடை விதிக்காவிட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்ததைத்  (மிரட்டியதைத்?!)  தொடர்ந்து தமிழகத்தில் திரைப்படம் வெளியிட 15 நாட்கள் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக திரைப்படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கைக் குழு (சென்ஸார்) U/A சான்றிதழ் அளித்துள்ளது. சென்ஸார் கமிட்டியில் ஒரு இஸ்லாமியரும் இருந்திருக்கிறார் என்பது(ம்) குறிப்பிடத்தக்கது. [...]

Share

, ,

இதயம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

Rajinikanth

12-12-12 அன்று 63-வது பிறந்த தினத்தைக் கொண்டாடும் தமிழ்த் திரையுலகின் தன்னிகரில்லாத் தலைவன் சூப்பர் ஸ்டாருக்கு இதயம் கனிந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

Share

,

டமில் பேசத் தெரிஞ்ச நடிகைங்க தேவையாம்!

1

நண்பர் ஒருவர் காலையிலேயே அழைத்திருந்தார். பிரபலமில்லாத தமிழ் சானல் ஒன்றும், ‘கப்ஸா’விற்கு புகழ் பெற்ற இணைய தளம் ஒன்றும் இணைந்து ‘தமிழ்’ பேசும் கதாநாயகிகளை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப் போகிறார்களாம். அதற்காக இந்தியா மட்டுமின்றி மலேஷியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கெல்லாமும் செல்கிறார்களாம். (அமெரிக்கா, ஆப்பிரிக்கா, அண்டார்டிகாவையெல்லாம் ஏன் விட்டுவிட்டார்கள் என்று தெரியவில்லை). நண்பருக்குத் தெரிந்த குடும்பத்தின் பெண் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறாராம். அவர் இந்தப் போட்டியில் கலந்து கொண்டே தீருவேன் என்று அடம் பிடிப்பதாகக் கூறி வருத்தப்பட்டார். இத்தனைக்கும் [...]

Share

, ,

எனக்குப் போட்டியாளர் சூப்பர் ஸ்டார் ஒருவரே – பவர் ஸ்டார்

power star

கடந்த சனிக்கிழமையன்று சேலத்தில் நடைபெற்ற ‘மெகா டிவி – அரசன் சோப்’ இணைந்து வழங்கிய லஷ்மண் ஸ்ருதி இன்னிசை நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார் ‘பவர் ஸ்டார்’ டாக்டர் சீனிவாசன். அவரைக் காண்பதற்காக நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த ஏராளமான ரசிகர்கள் எழுப்பிய கேள்விகள் சிலவற்றுக்கு மேடையிலேயே அதிரடி பதில் தந்து அசத்தினார் பவர் ஸ்டார்.  உங்களுக்குப் பிடித்த நடிகர் யார்? உழைப்பால் உயர்ந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் மட்டுமே எனக்குப் போட்டியாளர். வேறு யாருமே [...]

Share

, , ,

‘துப்பு ஆக்கி’ – ’கட்டதொர’யின் திரை முன்னோட்டம்

1

இந்த வார புது வரவான ‘துப்பு ஆக்கி’ திரைப்படம்… இந்திய திரை உலகத்தையே திரும்பி பாக்க வச்சிருக்குன்னு சொல்லலாம்! இந்தப் படத்தை சென்சார் செய்யும் போது எல்லாருமா சேர்ந்து, ”இதுக்கு தணிக்கை கொடுக்க முடியாது”ன்னு சொல்லிருக்காங்க.  டைரக்டர் கிருகதாஸ் திடுக்கிட்டு வெளிய ஓடி, கடையிலே டீ வடை சாப்பிட்டுகிட்டு இருந்தவங்க கிட்ட வெவரம் சொல்லி கூட்டி வந்துருக்காரு. எல்லாருமா சேந்து,,”என்னங்க சார்..நல்ல ஆக்‌ஷன் படம் குடுத்துருக்கோம்.. தமிழ் திரையுலகை அடுத்தக் கட்டடத்துக்கு எடுத்துட்டுப் போகப் போகுது. இப்டி [...]

Share

, , ,

குறும்படம் எடுப்பது எப்படி?

kurum

தலைப்பில் ஒரு சிறிய தவறு இருக்கிறது! இப்படித்தான் குறும்படம் எடுக்கவேண்டும் என்று வரையறை எல்லாம் கிடையவே கிடையாது. இருந்தாலும், குறும்படம் ஏழு நிமிடங்களுக்கு மேல் இருந்தாலோ, கதைமாந்தர்கள் ஐந்து பேருக்கு மேல் இருந்தாலோ, அதை குறும்படம் என்று சொல்ல முடியாமல், நெடும்படம் என்று பயமுறுத்த வாய்ப்பிருக்கிறது. அப்படிப்பட்ட குறும்-நெடும்படங்களை எடுக்கும் ஆசாமி நீங்கள் என்றால்,  கீழே சொல்லப் பட்டிருப்பவை உங்களுக்கு உதவியாக இருக்கலாம். குறும்படம் எடுப்பதற்கு படப்பிடிப்பு, படத்தொகுப்பு, ஒலிப்பதிவு, இசை என்று நான்கு முதன்மையான படிமுறை [...]

Share

ஒரு கல் ஒரு கண்ணாடி – டபுள் ஓகே!

okok

’தமிழில் திரைப்பட பெயர் வைத்தால் வரிவிலக்கு’ என்று தூய தமிழ்த் தொண்டாற்றிய முத்தமிழ்க் காவலரின் பேரன் தயாரித்து, ஹீரோவாக நடித்து வெளிவந்திருக்கும் படம் ‘ரெட் ஜெயண்ட் மூவீஸின்’ ‘ஓகே ஓகே’ (ஒரு கல் ஒரு கண்ணாடி). ஏற்கனவே ஆதவன் திரைப்படத்தில் க்ளைமாக்ஸில் ஒரே ஒரு காட்சியில் தலையைக் காட்டியிருந்தாலும் உதயநிதி ஸ்டாலினுக்கு இது தான் முதல் படம். கண்டிப்பாக அஜீத், விக்ரம், சூர்யா, விஜய் என்று இன்றைய தலைமுறை ஹீரோக்கள் யாருடைய முதல் படத்திலும் இந்த அளவிற்கு [...]

Share

, , , , , ,

Old is (g)OLD : கொத்து # 1 – ஊமை விழிகள்

oomai vizhigal

கிணற்றிலிருந்து மெல்ல ஏறி, லெப்ட் ரை ட் திரும்பி , மூச்சிறைக்க மாடி ஏறி, மூடியிருந்த கதவை திறந்து பார்த்தால்… கதாநாயகி பத்திரமாகத்தான் இருந்தார். அப்பாடா.. என்று நிம்மதியாக திரும்பி, வாராண்டாவை நோக்கி நடந்த நேரத்தில் வில்லன் மிகச்சரியாக  நடு செண்டரில் அந்த வஸ்துவை  சொருக, கவலையே படாத நம் கதாநாயகன் (ஒன் ஆப் த கதாநாயகன்ஸ்!) அசால்ட்டாக  வெளியே உருவி, அதே வில்லனை மடக்கி சரக், சரக்…இத்தனை களேபரத்தையும் கட்டிலில் உட்கார்ந்தபடி பார்க்கும் கதாநாயகியிடம்  வீல் [...]

Share

, , ,

அம்புலி – 3D

ambuli

டேய் நான் அம்புலி போனேன் அம்புலியா? ஆமாண்டா தமிழோட முதல் 3D படம் அப்ப மை டியர் குட்டிச்சாத்தான்? அதெல்லாம் 2D ல எடுத்து அப்புறம் மாத்தினது. இது தான் 3D காமரால எடுத்த முதல் படம் கதை? பழசு தாண்டா . ஊருக்குள அந்தப் பக்கமா போன பேய் அடிச்சு சாப்பிடுடும்னு பழைய பிட்டு . யார் படம்டா இது? ஓர் இரவு படத்துல வந்த அதே டீம். அந்த படத்துல தயாரிப்பாளர், இயக்குநர், இசை, [...]

Share

, , , , ,

தோனி

Dhoni

இரவு 10.30 மணிக் காட்சிக்கு டிக்கெட் வாங்கி நானும் என் நண்பனும் உள்ளே சென்றோம். தியேட்டரில் ஆபரேட்டரையும், டிக்கெட் கிழித்தவரையும் சேர்த்தும் மொத்தமே 45  பேர் . பரவாயில்லை . நந்தலாலா 20 பொக்கிஷம் 30 .யுத்தம் செய் 35 … அந்த வரிசையில் ரொம்பவே அதிகம் தான்.. கதை என மகேஷ் மஞ்சரேக்கர் பெயரையும் ; திரைக்கதை வசனம் என ஞானவேல் பெயரும் போட்டு ‘பிரகாஷி’க்கிறார் இயக்குனர் . Shikshanacha Aaicha Gho (Marathi: शिक्षणाच्या आईचा घो) என்ற மராத்திய படத்தின் தழுவல் தான் ’தோனி’. படத்தின் [...]

Share

தலைவர் #5 – கோச்சடையான்

kochadaiyaan

’கோச்சடையான்’ படத்திற்கு, பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது. நமது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பது உலகமறிந்த செய்தி. படத்திற்கான போட்டோ செஷன் சமீபத்தில் நடந்தேறியது. புத்துணர்ச்சியோடும் உற்சாகமாகவும், போட்டோ செஷனில் கலந்து கொண்ட ரஜினி, அருமையாக ஒத்துழைப்புக் கொடுத்ததாக, செஷனில் கலந்துக் கொண்டவர்கள் கூறினார்கள். கதாநாயகியைத் தவிர, முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் யார் யாரென முடிவாகி விட்டதாம். “ராணா’ படத்தில் நடிக்கவிருந்த தீபிகா படுகோன், இந்தப் படத்தில் நடிப்பது சந்தேகமே. பாலிவுட் நடிகை காதரீனா கைஃப் [...]

Share

, , ,

நடிகர் திலகம் திரைப்பட திறனாய்வு அமைப்பு

சிவாஜி கணேசன்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் – தமிழ்த் திரையுலகத்தின் பல்கலைக்கழகம். இன்றும், அவரை துரோணராக பாவித்து, தமிழ்த் திரையுலகத்தில் நடிக்க வரும் ஏகலைவர்கள் பலர் இங்குண்டு. ”நான் சிவாஜி மாதிரியெல்லாம் நடிக்க முடியாது. ஆனால்,  சிவாஜி அவர்களிடத்திலிருந்து நான் கத்துகிட்டது, அவரது “பங்சுவாலடி” (காலந் தவறாமை) மற்றும் “தொழில் பக்தி” – இப்படிக் கூறியது, இன்றும் அதை கடைபிடித்துக் கொண்டிருக்கும் உச்ச நட்சத்திரம் (சூப்பர் ஸ்டார்)  ரஜினி. “சிவாஜி அவர்களின் நடிப்பு எனும் சரித்திர புத்தகத்திலிருந்து எதாவொரு [...]

Share

, , ,

The Bicycle Thieves – சுடச்சுட உலக சினிமா விமரிசனம்

bicycle thief

உலகின் சிறந்த பத்து படங்களை எவர் தேர்வு செய்தாலும் இதற்கு நிச்சயம் ஓர் இடமுண்டு. Neo-realistic வகையை சார்ந்த இப்படம்,1948 இல் வெளியானது திருடன் ஏன் திருடுகிறான்? வாழ்வில் திருடாமலோ திருட்டுடன் சம்பந்தபடாமலோ வாழ்பவர்கள் மிகவும் குறைவு. மனம் எண்ணற்ற விசித்திரங்களை கொண்டது.அதற்கு சரியென்றோ தவறென்றோ ஒன்றுமில்லை. மாட்டிக் கொள்ளாத வரை எதுவும் தவறில்லை.இங்கு எதுவும் குற்றமில்லை. தவறு செய்ததை ஒப்புகொண்டால் மன்னிக்கபடமாட்டாய், தண்டிக்கப்படுவாய் என்கிறார் CONFUCIUS. தமிழில் வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன் திரைப்படம் இந்த படத்தில் [...]

Share

, ,

தலைவர் #4 – குரு பக்தி

rajini

சூப்பர் ஸ்டார் ரஜினியின் துணைவியார் லதா ரஜினிகாந்த் நடத்திக் கொண்டிருக்கும் “ஆஷ்ரம்” பள்ளி சார்பில், ஆண்டுதோறும் பள்ளி ஆண்டு விழா நடைபெறுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும், விழாவில், ரஜினிகாந்த் பெயரில், தேர்ந்தெடுக்கப்படும் ஒருவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, ’வாழ்நாள் சாதனையாளர் விருது’ பாலசந்தர் அவர்களுக்கு, வழங்கப்பட்டது. வாழ்க்கையில் அப்படி எதுமே சாதிக்காத தன் பெயரில்,  அதுவும் தன் குருவிற்கே இந்த விருது வழங்கப்படுவது, தனக்கு தர்ம சங்கடமாக இருக்கிறது என்று கூறிய [...]

Share

, , , , ,

நண்பன் – புதுசா ஒண்ணுமேயில்லே பாஸ்!

nanban

 சிலவருடங்களுக்கு முன் வேலைவிஷயமாக சிலநாட்கள் திண்டிவனத்தில் தங்கியிருந்தபோது தூக்கம் வராத ஒரு இரவில் ஏதேனும் சினிமாவிற்குப் போவோம் என்று பக்கத்தில் இருந்த தியேட்டருக்கு நானும் நண்பனும் போனோம். சிரஞ்சீவி போஸ்டரில் போஸ் தந்து கொண்டிருந்தார். தெலுங்குவிலிருந்து தமிழுக்கு டப்பிங் செய்யப்பட்ட படம் ஏதோ ஒன்று. அடடே! மனவாடு படம்! சுவாரசியமாகத்தான் இருக்கும் என்று உள்ளே நுழைந்தோம். படம் ஆரம்பித்த சில நிமிடங்களில், இந்தப்படத்தை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்று தோன்றியது. இரண்டாவது காட்சியில் விளங்கிவிட்டது. அது ரஜினி நடித்த [...]

Share

, , , ,

தலைவர் #3, வித்தியாசமான இணைய தளம்

rajinikanth

தலைவருக்காக எத்தனையோ இணைய தளங்கள் இருக்கின்றன. அவரை பாராட்டி, அவரை ஆதரித்து, அவரை ஆராதித்து, அவரை கிண்டல் செய்து – இப்படி ‘பிழைக்கவும் ரஜினி, பழிக்கவும் ரஜினி’ என்று பத்திரிகைகள் செய்யும் இரட்டை வேடம் போல, இணைய தளங்களும் ஹிட் வாங்க தலைவரை உபயோகிக்கின்றன. (இதில் எதிலுமே சேராதது நமது கட்டுரை.காம் என்பது உங்களுக்கெல்லாம் தெரிந்த விஷயம்!) இதோ ஒரு இணைய தளம்..(http://www.desimartini.com/allaboutrajni.htm) வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆமாம்.. இந்த இணைய தளத்தினுள் நுழைந்த பிறகு நமது இணைய [...]

Share

, , ,

நேற்று ரஜினி, இன்று கமல்.. நாளை?

shruthi hasan

நேற்று ரஜினியின் மகள்களுக்கிடையே சண்டை என்று சிண்டு முடிந்த பத்திரிகைகள், இன்று கமல் மகளான ஸ்ருதியை வம்புக்கு இழுத்துள்ளன. அதாவது, ஸ்ருதியுடன் தனுஷை இணைத்து, தேவையில்லாத  வதந்தியை பரப்பியுள்ளனர்.  காய்ந்த மரம் தான் கல்லடி படும் என்ற கதையாய், புகழேணியில் ஏறிக் கொண்டிருக்கும் ஸ்ருதிக்கு மட்டுமல்லாமல், ரஜினிக்கும் கமலுக்குமே, இந்த செய்தி, மிகுந்த வேதனையை கொடுத்திருக்கும். ஒரு படம் சேர்ந்து நடித்தாலே, அந்த படத்தில் நடிக்கும் நடிகர் – நடிகையிடையே கெமிஸ்டரி, பயாலஜி எல்லாம் ஒர்க்-அவுட்டாகி விட்டது [...]

Share

, , , , , , ,

தலைவர் #2 – பத்திரிகைகள் திருந்துமா?

1

ரஜினி… ஒரு மூன்றேழுத்து மந்திரம். அதுவும் நமது பத்திரிகைகளுக்கு அவரைப் பற்றி நியூஸ் போடுவது என்றால் திருநெல்வேலி அல்வா சாப்பிடுவது போல! சமீபத்தில் இயக்குநர் எஸ்.பி. முத்துராமனுக்கு நடந்த பாராட்டு விழாவில், ஒரு சில பத்திரிகைகளைச் சேர்ந்த நண்பர்கள் மட்டுமே இருந்தனர்.  ஆனால், திடீரென்று விழாவிற்கு ரஜினி வருகை புரிந்துள்ளார் என்ற செய்திக் காட்டுத்தீப் போல பரவி, விழா மண்டபமே, ஒரு சில நிமிடங்களில், பத்திரிகை நண்பர்களால் நிரம்பி வழிந்தது. பின்னர் தள்ளு முள்ளு ஆனது.  எஸ்.பி.எம்க்கு [...]

Share

, , , ,

‘நண்பன்’ – பொங்கலுக்கு வந்த தீபாவளி லேகியம்

1

வானத்தில் ஆரம்பித்து, கடலில் முடியும் வரை, எந்த இடத்திலும் ஒரு மில்லி மீட்டர் வித்தியாசமில்லாமல் 3 இடியட்ஸ் இந்தி படத்தின் ஈயடிச்சான் காபியாக (2 பாட்டு எக்ஸ்டரா) வெளி வந்திருக்கும் படம் தான் ஷங்கரின் நண்பன். தமிழில் உரிமை கொடுக்கும் போதே, தமிழ்ப் படத்தில், எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்று கண்டிஷன் போட்டிருப்பார்களோ என்னவோ, படம் முழுவதும் ஷங்கரின் கைகள் கட்டப்பட்டு இருப்பது நிஜம். ஷங்கர் ஒரு ஹிந்தி படத்தை ரிமேக் செய்ய ஒத்துக் கொண்டது ஆச்சரியம் [...]

Share

, , , ,

நீ எதுக்கு தலைவா இந்தப்படத்துலே நடிக்க ஒத்துகிட்ட? – கட்டதொர கடிதம்

1

அன்புத் தலைவா விஜய். உன் அப்பாவி ரசிகன் எழுதிக் கொள்(ல்)வது. கடுப்பைக் காட்டுறதுக்கு முன்னாடி, உனக்கு பொங்கல் வாழ்த்தை சொல்லிடுறேன்! முதல்ல யாரைக் கேட்டு இந்த படத்திலே நடிக்க நீ ஒத்துக்கிட்டே? நீ ரீமேக்ல மட்டும்தான் நடிப்பேன்னு உலகத்துக்கே தெரியும். ஆனா  இப்புடி செத்தவன் வாயில வெத்தலையை வெச்ச மாதிரியான ஒரு கேரக்டர்லே உன்னை பார்க்க முடியாம பாப்கார்னை வாய்ல திணிச்சுகிட்டு நான் குலுங்கிக் குலுங்கி அழுதது எனக்கு மட்டும் தான் தெரியும் தலைவா! கதை – [...]

Share

, , ,

Previous Posts

Copyright © 2012 Katturai.com – கட்டுரை.காம். All Rights Reserved
ஆசிரியர் : மாயவரத்தான் (www.Mayavarathaan.in / Twitter : @mayavarathaan )
வடிவமைப்பாளர் & துணை ஆசிரியர் : வின்மணி (www.winmani.com)

DMCA.com