பொது
ஈமு : ஏமாறச் சொன்னது யாரோ?!
தேக்கு மரம், சந்தன மரத்தில் ஆரம்பித்து, பெனிபிட் பண்ட், பைனான்ஸ் கம்பெனி, காந்தப் படுக்கை, கோல்ட் கிரஸ்ட், அயல்நாட்டில் வேலை, தீபாவளிச் சீட்டு என பாடுபடாமல் சம்பாதிக்க ஆசைப்பட்டு, பாடுபட்டு சேர்த்த பணத்தை தொலைத்தவர்கள் ஆயிரக்கணக்கில்! இழந்த தொகையோ பல கோடிக்கணக்கில் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை. இல்லாததற்கு பேராசைப்பட்டு இருப்பதை இழந்து இன்றும் பனகல் பார்க்குகளிலும், பெருந்துறை ஹோட்டல்களிலும் கூடி புலம்பிக் கொண்டிருப்பவர்கள் ஏராளம்.. இந்த வரிசையில் அடுத்த இதோ லேட்டஸ்ட்…“ஈமு” கோழி வளர்ப்பு. [...]
ஏர்டெல் – Fraudband விலை உயர்வு
ஏர்டெல் குறித்து ஏராளமான புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனாலும் அவர்கள் திருந்துவது போலத் தெரியவில்லை. பேய், பிசாசு என்று இரண்டு ஆப்ஷன்களில் ஏதாவது ஒன்றை தான் தேர்ந்தெடுக்க முடியும் என்ற வினோதமான ‘ஓபன் பாலிஸி’ இருப்பதால் நாம் வேறு வழியின்றி பேயுக்கு பயந்து பிசாசைத் தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. பி.எஸ்.என்.எல்.-க்கு இது பரவாயில்லை என்பது தான் ஏர்டெல் பக்கம் பலர் வருவதற்குக் காரணம். இதோ.. அனைத்து நெட்வொர்க்குகளும் விலைகுறைப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது ஏர்டெல் [...]
மருத்துவ காப்பீடு எடுக்கப் போகின்றீர்களா?
மக்களின் இப்போதைய தேவை மருத்துவக் காப்பீடு. மருத்துவ செலவு என்பது எல்லோராலும் ஈடுகட்ட முடியாத ஒன்று. அதனால் தான் மக்களும் எதாவது ஓர் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ளத் தயாராகி வருகின்றனர் . தற்போதைய தொலைக்காட்சி விளம்பரங்களும் மருத்துவ காப்பீட்டின் அவசியத்தினை மக்களிடம் அதிகமாய் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தியுள்ளன. இப்போது மார்ச் மாதம் நெருங்குகிறது! வருமான வரி செலுத்துபவர்கள், தங்கள் வரிவிலக்கிற்காக பல்வேறு காப்பீட்டு திட்டங்களில் முதலீடு செய்ய காத்திருக்கும் தருணம் இது. இத்தருணத்தை எதிர்நோக்கி காப்பீடு செய்யும் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் [...]
என்ன தான் சொல்லுங்க..ஆம்பிளைப் பசங்க லூசுதான்!
‘கமர்கட்’ எழுதிய “ஆம்பிளைப் பசங்க சூப்பர் தான்.. ஏன் என்றால்…” கட்டுரை வெளியானது. உடனே அதற்கு எதிர்க்கட்டுரை வந்து விட்டது. இந்தா பு(ப)டிச்சுக்குங்க… அஞ்சு நாள் லீவுக்கு வெளியூர் போறதா இருந்தாலும் அதுபத்தி கடைசி நிமிஷம் வரைக்கும் அக்கறையில்லாம சோம்பேறித்தனமா ஒக்காந்திருந்துட்டு கடைசி நிமிஷத்துல போட்டுருக்கற ஒரே ஒரு ஜீன்ஸோட ஊருக்குப் போயி சுத்தியிருக்கறவங்களையும் சேர்த்து நாறடிச்சிட்டு நிக்கிற கண்ராவி குணம் பெண்களுக்கு இல்லை. ட்ராவலுக்கு நாலுநாள் முன்னாடியே நீட்டா ப்ளான் பண்ணி வேளாவேளைக்குத் துணிமணி எடுத்துக்கிட்டுப் [...]
ஆம்பளப் பசங்க தான் சூப்பர்.. ஏன் என்றால்…
என்ன தான் சொல்லுங்க..ஆம்பிளைப் பசங்க தான் சூப்பர்.. காரணம் வேணுமா? இந்தா பு(ப)டிச்சுக்குங்க… அஞ்சு நாள் லீவுக்கு வெளியூர் போறதா இருந்தாலும் ஒரே ஒரு ஜீன்ஸ் பேண்ட் போதும். அஞ்சு வேளைக்கு ஐநூறு டிரஸ் அப்படீன்ற பேச்சே இல்லை. யாரா இருந்தாலும் அரை நிமிஷத்துக்கு மேலே ஃபோனிலே பேசுற பழக்கமே கிடையாது. எத்தனை வருஷமா ஆனாலும் மொத்த முடியும் கொட்டி வழுக்கையாகுற வரைக்கும் அதே ஹேர் ஸ்டைல் தான்! 50 பேருக்கு டிரஸ் எடுக்குற வேலையா இருந்தாலும் [...]
எது நாகரீகம்?
எது நாகரீகம்? இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொன்னாலும் பொருந்தும். சிந்து சமவெளியில் தொடங்கி இன்றளவும் தொடர்கிறது நாகரீகம்.இன்று சொல்லும் பதில் நாளை தவறாகி விடலாம். அது ஒரு மாற்றத்தின் கட்டாயத்தில் உள்ளது. தவறெனக் கொள்ளப்படுவது சரியாவதும், சரி எனக்கொண்டது தவறாவதும் வாடிக்கை ஆகிவிட்டது..1950-களில் கடுக்கன் போடும் ஆண்கள் மத்தியில் போடாதவர்கள் குற்றவாளிகள் போல் பார்க்கப்பட்டனர். இன்றும் அதே நிலைமை. என்ன ஒரு சிறு மாற்றம் கடுக்கன் STUD ஆகி உள்ளது. ஒரு குவளை அளவு அரிசியில் [...]
டி.வி. நிகழ்ச்சிகள் – ரியலா, ரீலா?
தொலைக்காட்சி புழக்கத்துக்கு வந்த காலத்தில், மக்கள் அதை ஒரு ஆடம்பர பொருளாகத் தான் கருதினர். பிறகு, அதுவே ஒரு அத்தியாவசியப் பொருளாகி, இப்போது இலவசமாக கிடைக்கக் கூடிய பொருளாகவும் மாறி விட்டது. வந்த புதுதில், வெள்ளிக்கிழமை ஒளிப்பரப்படும் “ஒலியும் ஒளியும்” திரைப்படப் பாடல் நிகழ்ச்சிக்காகவும், ஞாயிற்றுக்கிழமை ஒளிப்பரப்படும் திரைப்படத்திற்காகவும், மக்கள் பார்ப்பதற்கு ஏங்கி, தொலைக்காட்சி இருக்கும் வீட்டை நோக்கி அலைந்ததுண்டு. ஏனென்றால், சென்னை தொலைக்காட்சியில், மற்ற நேரங்களில், ஹிந்தி நிகழ்ச்சிகள்தான் அதிகம் இடம் பெற்றிருக்கும். ஆனாலும், விவசாயிகளுக்காக [...]
கக்கூஸ் #6 – காலேஜ் கக்கூஸ்
விவேகானந்தா காலேஜுல ராமு ஹாஸ்டல், ராமகிருஷ்ணானந்தா ஹாஸ்டல்னு ரண்டு இருக்கும். மதப்பன் ராமு ஹாஸ்டல்லதான் டிகிரி படிக்கறப்பத் தங்கியிருந்தாரு. ‘ப’ வடிவத்தில ஹாஸ்டல் இருக்கும். தரைத் தளத்துக்கும் மேல ரண்டு மாடி. ஒவ்வொரு மாடியிலயும் சைடுக்கு 4 வீதம் 8 கக்கூஸுங்க இருக்கும். ஒரு கக்கூஸுக்குக்கும் இன்னொரு கக்கூஸுக்கும் தடுப்புச் சுவர் 8 அடி ஒசரத்துல இருக்கும். அதுக்கு மேல சீலிங்குக் கொஞ்சம் இடைவெளியும் இருக்கும். அங்க என்னாச்சுங்கறதுக்கு மின்னாடி ஏப்ரல் 1 ஆம் தேதி என்னாச்சுங்கறத [...]
காந்தியைப் போற்றுவோம் ~ தியாகிகள் தின ஸ்பெஷல் கட்டுரை – கோகுல்பிரசாத்
ஜனவரி 30. நாம் வருடந்தோறும் இரண்டு நிமிட அஞ்சலியோடு முடித்துக்கொள்ளும் தினம். மகாத்மா காந்தியை கொடியன் கோட்சே சுட்டுக்கொன்ற தினமே தியாகிகள் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. எத்தனையோ தியாகிகள் இத்திருநாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்திருக்க காந்தியை மட்டும் முன்னிறுத்துவது எப்படி நியாயமாகும் என்பதே காந்திய எதிர்ப்பாளர்கள்(?!) முன்வைக்கும் முதல் குற்றச்சாட்டு. ஏன் காந்தியை மட்டும் முன்னிறுத்துகிறோம்? சுபாஷோ, பகத்சிங்கோ தியாகி இல்லையா? காந்தி ஒரு குறியீடு. அவர் மூலம் பிற தியாகங்களையும் பண்புகளையும் நாம் மீட்டெடுக்க உதவும் கருவி அவர். [...]
மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்! – ’கரையான்’
காடுகள் நாட்டின் கண்கள். வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம். – இப்படி நிறைய slogan-களை நாம் பார்த்து விட்டோம். எத்தனையை செயல்படுத்தி இருக்கிறோம்? மரம் வளர்ப்பது நல்ல விசயம் தான், கேட்பதற்கு நன்றாக தான் இருக்கிறது வளர்பதற்கு நேரமோ இடமோ இல்லை என்பது தான் பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கிறது. நாம் அனைவரும் அறிந்தது தான். புவி வெப்பமாதலுக்கு முதன்மையான காரணம், பசுமை கூட வாயுக்களின் வெளியேற்றம், அவற்றில் முக்கியமாக கார்பன்-டை-ஆக்சைடின் விகிதாச்சார அளவு அதிகரிப்பது. ஒளிர்சேர்க்கை செய்யும் [...]
குடியரசு தின கொண்டாட்ட வேதனைகள்
சாகஸங்கள் செய்து சாதனையில் முடிய வேண்டிய வீரச்செயல்கள், வேதனையில் முடிந்த கதைகள் இரண்டு 63வது குடியரசு தின விழாவில் நடந்தேறியது. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி மலைப்பகுதியில் நடந்த குடியரசு தின விழா, வழக்கமான உற்சாகத்துடன்தான் கொண்டாடப்பட்டது. சம்பிரதாய கொடியேற்றங்கள், காவலர் அணிவகுப்புகள், கலை நிகழ்ச்சிகள் என விழா களை கட்டியது. விழாவின் இறுதி நிகழ்ச்சியாக, நீலகிரி மாவட்ட ஆயுதப் படை காவலர் திரு. பாண்டியன், தன் ஜிம்னாஸ்டிக்ஸ் சாகஸங்களை நிகழ்த்த வந்தார். முதலில் பைக்கில் உட்காராமலும், பின்னர் நின்று [...]
தறிக்கெட்டு ஆடும் கிரிக்கெட்டு அணி
கிரிக்கெட்டில் சொதப்புவது எப்படி? இந்தக் கேள்விக்கு, கண்ணை மூடிக் கொண்டு நமது அணி தற்போது ஆஸ்திரேலியாவில் (ஊசல்) ஆடிக் கொண்டிருக்கும் ஆட்டத்தை உதாரணமாக சொல்லலாம். ஆமாம், ஜெயித்தால் ஒரேயடியாக தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டியது. தோற்றால், தூக்கிப் போட்டு மிதிக்க வேண்டியது. இதுதான், இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் வாடிக்கை. ஏற்கனவே, இங்கிலாந்து மண்ணில், இங்கிலாந்து அணி, நமக்கு சுத்தமாக சுண்ணாம்பு (அதாங்க WHITE WASH) அடித்தத போது, ”ஐ.பி.எல் போட்டிகள், ஓய்வில்லை, உடல் தகுதியற்ற வீர்ர்கள்” போன்ற [...]
திறந்த வெளி புல்வெளிக் கழகக் கல்வி! – கேவல ரிப்போர்ட்
அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு? என்று கூறியே பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரும் உரிமை மறுக்கப்பட்டது ஒரு காலம். பின்னர், பல்வேறு சமுதாய புரட்சியாளர்களின் முயற்சியால், பெண்களுக்கு கட்டாயக் கல்வி ஆரம்பிக்கப்பட்டது. “ஒரு ஆண் மகன் கல்வி கற்றால், அது அவனுக்கு மட்டுமே நன்மை பயக்கும். ஆனால் குடும்பத்திலுள்ள ஒரு பெண் கல்வி கற்றால், முழு குடும்பமும் நன்மை அடையும்” என்பது நமது தேசப்பிதா காந்தியடிகளின் வாக்கு. சுதந்திரம் பெற்ற பின், நமது அரசாங்கம் [...]
கேப்பையில் நெய் வழிகிறது என்று சொல்லும் கேணைகள்!
நேற்று தான் “கோயபல்ஸ் வகையாறாவுக்கே கோமணம் கட்டும் வேலை” என்று எழுதியிருந்தேன். பிரசுரித்த ஈரம் காயும் முன் அடுத்த செய்தி வந்து முள்ளாய்க் குத்துகிறது.கூடங்குளம் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு வெளிநாட்டிலிருந்து நிதி வருகிறது என்று மெய்ப்பிக்க இன்னொரு சித்துவேலை துவங்கியிருக்கிறார்கள்.அமெரிக்காவிலிருந்து ஜெர்மனியை சேர்ந்த ஒருவர் மூலம் நிதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் வந்த பணத்தை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சிலருக்கு வட்டிக்கு விட்டும் வருமானத்தை பெருங்கி தங்களை வளப்படுத்திக்கொண்டனர் என்றும் தெரிய வந்திருக்கிறது, என்பது அந்தச் செய்தி. [...]
ஜோதிடம் கடந்து வந்த பாதை
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது ஜோதிடக்கலை.அன்று இடுப்பில் கோவணமும் கையில் தண்டமுமாக பித்தர்கள் மாதிரி சுற்றித் திரிந்தவர்களுக்கு ஜோதிடம் எப்படித் தான் வசமானதோ தெரியவில்லை.கண்ணுக்குப் புலப்படாமல் மாயமாய் இருக்கும் கிரகங்கள், பூமியில் உள்ள மனித இனத்தை எப்படி ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது என்பதை ஆறாம் அறிவுக்கு அப்பாற்பட்ட ஞான ஒளியின் மூலமாக உணர்ந்து பாடல்களும் ,வெண்பாக்களுமாகத் தொகுத்ததில் 4,50,000 பாக்கள் என்பது உதிரி தகவல். 1.சூரியன் 2.பிரம்மன் 3.வியாசர் 4.வசிஸ்டர் 5.அத்திரி 6.பராசுரர் 7.கசியபர் 8.நாரதர் 9.கர்க்கர் [...]
சொல் என்றொரு சொல்
சொற்களை உபயோகிப்பது எளிது. உருவாக்குவது கடினம் எஸ்.ராமகிருஷ்ணன். தமிழில் சுமார் மூன்று லட்சம் வார்த்தைகள் உள்ளனவாம்.ஆங்கிலத்தில் எட்டு லட்சம் வார்த்தைகள். இன்று எந்த ஆங்கில அகராதியை வாங்கினாலும் குறைந்தது ஒரு [...]
ஸ்கூட்டி ஓட்டும் பெண்ணே…
“ஸ்கூட்டிய பத்தி நீ என்ன நெனைக்கிறே?” அப்படீன்னு ஒரு தோழி என்கிட்ட கேட்டப்ப, எனக்கு ரொம்பவே ஆச்சிரியமா இருந்திச்சு. என்னைப் பொருந்த வரைக்கும் இது ரம்மியமான கேள்வி, இதுக்கு நான் சொன்ன பதிலை இங்கே அப்படியே தர்றேன். படிச்சுப் பாருங்க.. பெண்களின் பாதி ரகசியம் உங்களுக்கே தெரிஞ்சுடும்! வித விதமா பைக் வெளம்பரம் போட்டு ஏமாத்துறாங்க. சிட்டி டிராஃபிக்கு ஏத்த வண்டி ஸ்கூட்டி தான். வேற வண்டிலே எல்லாம் நீங்க கியர் ஏத்தி ஏறக்கி மூச்சி விடுறதுக்குள்ள, ஸ்கூட்டி [...]
கோயபல்ஸ் வகையாறாவுக்கே கோமணம் கட்டும் வேலை
கூடங்குளம் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு வெளிநாட்டிலிருந்து நிதி வருவதால் போராடுகின்றனர் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமியும் அணுசக்தி தலைவர் ஸ்ரீகுமாரும் தெரிவித்தனர். செய்தியைச் சொல்லிவிட்டதால் இதை உண்மையாக்கப் படாத பாடுபட்டு மத்திய அரசு அதிகாரிகளை முடுக்கிவிட்டு எப்படியாவது வழக்கில் சிக்கவைத்து விட ஏற்பாடுகள் நடந்தது. அதிகாரிகளுக்கு இடப்பட்ட கட்டளையை அவர்கள் செய்தாகவேண்டுமே, முடியைப் பிய்த்துக்கொண்டு களம் இறங்கினர்.கடைசியாக, “கூடங்குளம் எதிர்ப்பு போராட்டத்துக்கு நிதி உதவிக்கான ஆதாரங்கள் சிக்கின” என்று நாளிதழ்களில் செய்திகள் வந்தது. படிக்கிற பொதுமக்கள் என்ன [...]
சுற்றுச் சூழல் – நம் பூமி, நாம் காப்போம்
உலக வெப்பமாதல் தடுக்கப் பட வேண்டியதன் அவசியம் நம் எல்லோருக்கும் தெரிந்தது தான், அதை விளக்கி நிறைய ஆங்கில திரைப் படங்களும் வந்து விட்டன. தற்போது மக்களுக்கும் ஓரளவு நிலைமையின் விபரீதம் உரைத்துள்ளது. நாம் வாழும் இந்தப் பூமியைப் பாதுகாப்பதில் நம்மால் என்ன செய்ய இயலும் என்பது தான் பலருக்கும் தெரியாமல் இருக்கிறது, அல்லது நாம் செய்யும் சிறு செயல்கள் என்ன பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விட போகிறது என்ற அசட்டையான எண்ணம் இருக்கிறது. “ஒரு சிக்கலான கட்டமைப்பில் ஒரு இடத்தில் தோன்றும் [...]
லாண்டரிக் குறிப்புகள் #4 – குட்டி, சிட்டி,தட்டி
குட்டி – ஒரு சொட்டு உயிர் 13-1-2011 to 13-1-2012 ஒரு வருடம். இந்தியாவில் ஒரு பெரிய சாதனை நிகழ்ந்திருக்கிறது. எந்த இந்திய நாளிதழ்களும், மைக் ‘மோகன்’ மீடியாக்களும் இதை கவனிக்கவில்லை. இந்த இடைப்பட்ட 365 நாட்களில் ஒரு போலியோ கேஸ் கூட இந்தியாவில் பதிவு செய்யப்படவில்லை. முன்னேறிய உலகின் பொது மருத்துவ சேவையில் இது ஒரு மைல்கல். ஒரு வருடத்திற்கு கிட்டத்திட்ட 170 மில்லியன் (17 கோடி) குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது. 2013 [...]





