நகைச்சுவை
மேட்டர் அம்புட்டுத்தான்! – ஆஸ்திரிய நாட்டு தபால் தலை உண்மை நிலவரம்!
திமுக தலைவர் மு.கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய தமிழ்ப்பணி & சமுதாயப்பணி (?!) ஆகியவற்றைப் பாராட்டி ஆஸ்திரிய நாட்டு அரசாங்கம் அவருடைய உருவப்படம் பொறித்த தபால் தலையை வெளியிட்டுள்ளதாக ’விடுதலை’ என்ற பெயரில் வெளியாவதாகக் கூறப்படும் நாளிதழ் ஒன்றும், அதனை தனது முதல் பக்கத்தில் ‘முரசொலி’ நாளேடும் வெளியிட்டு புலகாங்கிதப்பட்டன. இது குறித்து ஏற்கனவே கட்டுரை.காம் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. அந்தக் கட்டுரையில் தெள்ளத் தெளிவாக மேற்படி ஆஸ்திரிய நாட்டில் யார் வேண்டுமானாலும் புகைப்படத்தைக் கொடுத்து [...]
அடடே.. அடடடே.. அடடடடடடே!
உண்மையிலேயே இவர்கள் தெரிந்து தான் செய்தி வெளியிட்டார்களா? அல்லது பெருமைக்காக இவர்களிடமே ‘கதை’ அளந்து விடப்பட்டதா என்பது தெரியவில்லை. இப்போது இந்திய தபால் துறையிலும் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டிருப்பதைப் போல நமக்குத் தேவையான புகைப்படத்தைப் பயன்படுத்தி ஸ்டாம்ப் அச்சடித்துக் கொள்ளும் வசதி ஆஸ்திரிய நாட்டு தபால் துறையில் பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. மேலதிக விபரங்களுக்கு ஆஸ்திரிய நாட்டு தபால் துறை இணைய தளத்தைப் பார்க்கவும். 69 செண்ட்டிலிருந்து 999 செண்ட் வரை ஸ்டாம்ப்பின் தொகையை வைத்து [...]
சாதிக்கணும்… இப்பவே!! ஒரு தன்னம்பிக்கைக் கட்டுரை!
மனுசனாப்பிறந்தா எதையாவது சாதிக்கணும்! நாம் என்ன சாதி என்பது முக்கியமில்லை! என்னத்த சாதிச்சோம்’கிறதுதான் முக்கியம்! ஒருநாள் நான் யோசிச்சுப்பார்த்தேன்! சாதனை பண்ணின பசங்கள்லே நிறையப்பேர் நிச்சயமா என்னையை விட முட்டாள் பீஸுக! பொறாமையிலே பேசறான்னு நினைச்சாலும் பரவாயில்ல! ஆனா அதுதான் உண்மை! கொஞ்ச நாளா..மனசுக்குள்ளே.. நான் கூடிய விரைவில் ஏதோ சாதிக்கப்போறேன் என்று பட்சி சொல்லிட்டே இருக்கு! ஒருநாள், தயங்கி, தயங்கி என் மனைவிடம் சொன்னேன்! அவங்களுக்கு நான் சொன்னது ரொம்ப நேரம் புரியல.. ”..ம்! நான் ஏதாவது சாதிக்கணும்! நீ மட்டும் [...]
‘துப்பு ஆக்கி’ – ’கட்டதொர’யின் திரை முன்னோட்டம்
இந்த வார புது வரவான ‘துப்பு ஆக்கி’ திரைப்படம்… இந்திய திரை உலகத்தையே திரும்பி பாக்க வச்சிருக்குன்னு சொல்லலாம்! இந்தப் படத்தை சென்சார் செய்யும் போது எல்லாருமா சேர்ந்து, ”இதுக்கு தணிக்கை கொடுக்க முடியாது”ன்னு சொல்லிருக்காங்க. டைரக்டர் கிருகதாஸ் திடுக்கிட்டு வெளிய ஓடி, கடையிலே டீ வடை சாப்பிட்டுகிட்டு இருந்தவங்க கிட்ட வெவரம் சொல்லி கூட்டி வந்துருக்காரு. எல்லாருமா சேந்து,,”என்னங்க சார்..நல்ல ஆக்ஷன் படம் குடுத்துருக்கோம்.. தமிழ் திரையுலகை அடுத்தக் கட்டடத்துக்கு எடுத்துட்டுப் போகப் போகுது. இப்டி [...]
ஹிந்தி அழிந்து விடும்
குஜராத் உயர்நீதிமன்றத்தில் சுரேஷ் கச்சாடியா என்பவர் 2009-ம் ஆண்டில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த வழக்கில் ஹிந்தி மொழி, இந்தியாவின் தேசிய மொழி என்பதால் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பொருள்கள் அடைக்கப்பட்ட பெட்டிகளின் மேல் அப்பொருளினைப் பற்றிய விலை, உள்ளடக்கம், தரம் ஆகிய விவரம் குறித்த தகவல்களை ஹிந்தி மொழியில்தான் அச்சிட வேண்டும். இது தொடர்பான உத்தரவை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பிறப்பிக்க நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என்றும் விண்ணப்பித்திருந்தார். இந்த வழக்கு குஜராத் [...]
கமெண்ட்டரிக் காலங்கள்
சமீபத்தில் வழக்கம்போல இந்தியாவை ஆஸ்திரேலியா பின்னிப் பெடலெடுத்துக் கொண்டிருந்த இறுதி டெஸ்ட் கிரிக்கெட் பந்தயத்தை வானொலியில் நேர்முக வர்ணனை செய்துகொண்டிருந்த ப்ரொஃபெஸர் ரவி சதுர்வேதிக்கு இவ்வாண்டின் விளையாட்டு வர்ணனைக்காக பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது. வானொலியில் கிரிக்கெட் நேர்முக வர்ணனை கேட்பது அலாதியானது. சில நேர்முக வர்ணனையாளர்களின் கமெண்ட்டரி சிக்ஸர்களும், பவுண்டரிகளும் நம்மை நேரே(ரு) ஸ்டேடியத்திற்கு அழைத்துச் செல்ல வல்லவை. கண்ணில்லாத திருதிராஷ்டிரனுக்கு சஞ்சயன் மஹாபாரதப் போர் கமெண்ட்டரி கொடுத்தது போன்றவை அவை. டி.வி.க்களின் சர்வாதிகாரம் இல்லாத காலங்களில் [...]
கக்கூஸ் # 3 – ஐயோ அனுபவம்
நண்பர் ‘ம்யூசியம்’ சந்திரசேகரனிடம் பேசிக் கொண்டிருந்தேன். என்னுடைய ’கக்கூஸ்’ கட்டுரைத் தொடர், மணம், குணம், தரத்துடன் இருப்பதாக சிலாகித்தார். உபரியாக அவர் சொன்ன ஒரு தகவல்தான் இந்தக் கட்டுரைக்குத் தூண்டுகோல். ஒரு ம்யூசியத்தின் பின் பக்கம் ஒரு வெஸ்டர்ன் கக்கூஸ் நெம்ப நாளாகப் பயன்படுத்தப்படாமல் இருந்து வந்திருக்கிறது. ம்யூசியத்துக்கு வந்த ஒருத்தருக்கு அவசரமாகக் கக்கா வந்து விட, கேட்பாரற்று அல்லது உட்காருவாரற்றுக் கிடந்த அந்த வெஸ்டர்னில் ‘உட்கார்ந்து’ விட்டாராம். (இன்வெஸ்டிகேட்டிங் ஜர்னலிஸ பாணியில் ’உட்கார்ந்தாராம்; இருந்தாராம்; வந்ததாம்;’ [...]





