அறிவிப்பு
கல்வி உதவித் தொகை கோரிக்கை
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு +2 தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தும் பண வசதியின்மை காரணமாக மேற்படிப்பு தொடர இயலாமல் போன மதுரையைச் சேர்ந்த இலங்கை ஏதிலியர் பெண் ஒருவருக்கு அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் உயர்திரு சகாயம், இ.ஆ.ப. அவர்கள் பொறியியல் கல்லூரி ஒன்றில் நுழைவுக் கட்டணம் எதுவுமின்றி இடம் பெற்றுத் தந்தார். ஹாஸ்டல் மற்றும் தங்கும் விடுதிக் கட்டணமாக 35,000 ரூபாய் தாய்லாந்து தமிழ்க் கழகத் தலைவர் எஸ். கியாசுதீன் செலுத்தியிருந்தார். அதே போல [...]
வம்சி புக்ஸ் – தமிழ் ஸ்டுடியோ புத்தக வெளியீட்டு விழா
எதிர்வரும் மார்ச் 9-ம் தேதி சனிக்கிழமையன்று வம்சி புக்ஸ் மற்றும் தமிழ் ஸ்டுடியோ இணைந்து நடத்தும் ஐந்து புத்தகங்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற உள்ளது. இடம் : புக் பாயிண்ட் (அண்ணா சாலை ஸ்பென்சர் எதிரில்) நேரம் : மார்ச் 9, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு தொடர்புக்கு : 98406 98236 எழுத்தாளர்கள் ஆதவன் தீட்சண்யா, எஸ். ராமகிருஷ்ணன், கல்பட்டா நாராயணன், கடற்கரய், பிரபஞ்சன், இரா.முருகன், இயக்குநர்கள் பாலுமகேந்திரா, பாலா, ராம், கல்வியாளர் எஸ்.கே.பி. [...]
கல்வி உதவித் தொகை
கடந்த கல்வியாண்டின் போது +2 தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தும் பண வசதியின்மை காரணமாக மேற்படிப்பு தொடர இயலாமல் போன மதுரையைச் சேர்ந்த இலங்கை ஏதிலியர் பெண் ஒருவருக்கு அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் உயர்திரு சகாயம், இ.ஆ.ப. அவர்கள் பொறியியல் கல்லூரி ஒன்றில் நுழைவுக் கட்டணம் எதுவுமின்றி இடம் பெற்றுத் தந்தார். ஹாஸ்டல் மற்றும் தங்கும் விடுதிக் கட்டணமாக 35,000 ரூபாய் தாய்லாந்து தமிழ்க் கழகத் தலைவர் எஸ். கியாசுதீன் செலுத்தியிருந்தார். அப்போது இந்த கல்வியாண்டுக்கான [...]
கோவை, சேலம், பெங்களூர் – தற்காலிகப் பணியாளர்கள் தேவை
கோவை, பெங்களூர், சேலம்.. இந்த ஊர்களில் வங்கி ஒன்றில் ஒரு சில மாதங்களுக்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணி புரிய ஆட்கள் தேவை. கல்வித் தகுதி : Bachelor Degree பணி நேரம் : காலை 9 to 5 மணி வரை சம்பளம் : மாதம் ரூ. 6,000 Nett. தற்காலிக பணி மட்டுமே. ஒரு சில மாதங்கள் நீடிக்கலாம். ஆங்கிலம் எழுத, படிக்க நன்கு தெரிந்திருக்க வேண்டும் வயது வரம்பு : 25 வயதுக்குள் [...]
கோடை விடுமுறை 2013 – 17,500 ரூபாயில் பட்டாயா
கோடை விடுமுறை 2013 – கொண்டாடுங்கள்! சென்னை – பேங்காக் – பட்டாயா – 4 இரவுகள் / 5 நாட்கள் : ரூ. 17,500* சென்னை /திருச்சி – கோலாலம்பூர் – சிங்கப்பூர் – பட்டாயா – 7 இரவுகள் / 8 நாட்கள் : ரூ 32,000* தங்குமிடம் (Twin Sharing) விமான டிக்கெட் வரிகளுடன் சேர்த்து Airport transfer Site Seeing Tours (details will be provided upon request) சொந்தச் [...]
கல்வி உதவித் தொகை – வாருங்கள் உதவுவோம்
கடந்த ஆண்டு மதுரையில் இலங்கை ஏதிலியர் பெண் ஒருவர் பொறியியல் கல்லூரி விடுதிக் கட்டணம் கட்டுவதற்காக நண்பர்கள் ஒன்றிணைந்து உதவி செய்தோம். இன்னமும் 3 ஆண்டுகள் அந்தப் பெண்ணுக்கு கல்லூரிப் படிப்பு இருக்கிறது. ஆண்டுக்கு சுமார் அறுபதாயிரம் வரை கட்டணம். அதே போல இந்த ஆண்டும் அந்தப் பெண்ணுக்கும், மேலும் ஒரு சில பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏதிலியர்களுக்கும் கல்வி கட்டணத்தில் இயன்ற அளவு உதவ திட்டமிட்டுள்ளோம். பெயர் வெளியிட விரும்பாத நண்பர்கள் ஏற்கனவே பல முறை [...]
சென்னை மெகா ட்வீட்-அப்
சமூக வலைதளங்களில் ‘ட்வீட்டர்’ முக்கிய இடம் வகிக்கிறது. தமிழ் ட்வீட்டர்கள் இதனை பொழுது போக்கு அம்சமாக மட்டும் கருதாமல், பல நல்ல காரியங்களுக்கும் பயன்படுத்துகிறார்கள். ஆங்காங்கே ட்வீட்டர் உறுப்பினர்கள் சேர்ந்து பார்த்து பேசி வரும் ‘ட்வீட்-அப்’ நிகழ்ச்சிகள் அடிக்கடி நிகழும் சம்பவம். இப்போது தமிழ் ட்வீட்டர்கள் சிலர் ஒன்றிணைந்து சென்னையில் ஒரு ‘மெகா ட்வீட்-அப்’ நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வருகிறார்கள். எதிர்வரும் மே 13-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று சென்னையில் நிகழவிருக்கும் ட்வீட்டர்கள் சந்திப்புக்கான பிரமாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று [...]
பொதுநல அறிவிப்புகள்!
மக்களே.. ஸ்டார்ட் ம்ய்ஜிக்! அறிவிப்பு 1 : மத்திய அரசின் சார்பில் ஜாதிவாரியாகக் கணக்கெடுப்பு துவங்கியுள்ளது, இவ்விஷயத்தில் நம் சமூகத்தினர் ஒரு முகத்துடன், நாம் நம்முடைய எண்ணிக்கை பலத்தினை பிரதிபலிக்கின்ற வகையில் அனைவரும் ஜாதிப் பெயர் என்று கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் ”பிராமணர்” என்று குறிப்பிடும்படி அறிவுறுத்தப்படுகின்றனர், நமது உட்பிரிவுகளின் பெயர்களான ஐயர், ஐயங்கார், ராவ். பட்டாச்சார்யார். சிவாச்சார்யார் etc போன்றவற்றைக் குறிப்பிடுவதைத் தவிர்த்து நம் சமூகத்தினர் அனைவரும் தங்களது ஜாதி ”பிராமணர்” என்று மட்டுமே பதிவு செய்யும்படி [...]
கைதிகளுக்கான நூலகத்திற்கு புத்தகங்கள் அனுப்புங்கள்!
மதுரை மத்திய சிறையில் 1374 கைதிகள் உள்ளனர். அவர்களின் உணர்வு, உரிமை மதிக்கப்படும் வகையில், இசைப் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதேபோல மாவட்ட நிர்வாகம் நூலகம் ஒன்று அமைக்கவும் முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்நூலகத்திற்கு பொதுமக்கள் நன்கொடையாக பொது அறிவு, அறிவியல் உட்பட அனைத்து வகை நூல்களையும் வழங்கலாம். விருப்பமுள்ளவர்கள், நேர்முக உதவியாளர், ஜெயசிங் ஞானதுரையை (94421-64009) தொடர்பு கொண்டு வழங்கலாம் என மாவட்ட ஆட்சியர் சகாயம் தெரிவித்துள்ளார். அள்ளித் தருவீர். விருப்பமுள்ளவர்கள் கட்டுரை.காம் தொடர்பு கொண்டாலும் நாங்களும் உங்கள் [...]
‘தமிழ் விக்கிப்பீடியா’ நூலுக்கு தமிழக அரசு பரிசு
2010 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களில் கணினியியல் துறையின் கீழான வகைப்பாட்டில் முத்துக்கமலம் இணைய இதழின் ஆசிரியர் தேனி எம். சுப்பிரமணிஎழுதிய தமிழ் விக்கிப்பீடியா நூல் தேர்வு செய்யப்பட்டது. இந்நூலிற்கான சிறந்த நூலாசிரியர் பரிசுத் தொகை ரூபாய் முப்பதாயிரத்துக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகிஅயவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாஅவர்கள் முத்துக்கமலம் இணைய இதழின் ஆசிரியர் தேனி எம்.சுப்பிரமணிக்கு வழங்கினார். கடந்த ஏப்ரம் மாதம் 13 ஆம் தேதியன்று சென்னையிலுள்ள சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் தமிழ்ப் புத்தாண்டு [...]
’நந்தன’ வருட புத்தாண்டு பலன்கள் – கட்டுரை.காம் ஸ்பெஷல்
தமிழகமெங்கும் வழக்கமான உற்சாகத்துடன் ‘நந்தன’ தமிழ்ப் புத்தாண்டு இன்று கொண்டாடப்படுகிறது. “பல்லாண்டு காலமாக சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடிய தமிழ் மக்கள், அந்த நாள் வேறு ஒரு நாளுக்கு மாற்றப்பட்டதால் மனமுடைந்தார்கள். வலிந்து திணிக்கப்படுகிற மாற்றங்களை மக்கள் ஒரு நாளும் ஏற்பதில்லை. எனவே, சித்திரை முதல் நாளையே பெரும்பான்மை உலகத் தமிழர்கள் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடினர். சித்திரை முதல் நாளையே, தமிழ்ப் புத்தாண்டாக மீண்டும் அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டுமென பல கோடி தமிழர்கள் விரும்பினர். [...]
ட்வீட்டுத்துவம் – போட்டி முடிவுகள்
’ட்வீட்டுத்துவம்’ போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். ஆனால் நிறையப் பேர் போட்டி விதிமுறைகளை ஒழுங்காகப் பின்பற்றவில்லை. நன்றாக இருந்த சில ட்வீட்டுத்துவங்கள் கூட ட்வீட்டர் ஐடி குறிப்பிடாததால் நிராகரிக்கப்பட்டது. ஒரு ட்வீட்டுக்குள் அடங்காத ட்வீட்டுகளும் நிராகரிக்கப்பட்டன. போட்டி நடுவர்களிடம் யாருடைய ட்வீட் என்ற விபரம் தரவில்லை.அவர்களாக தேர்ந்தெடுத்ததில் இருந்து இந்த வெற்றிப் பட்டியலை அறிவிக்கிறோம். முதல் பரிசு : (ரூ. 1,000) ஒரு புதிய பொருளை வாங்கிய பின், அதன் மேம்படுத்தப்பட்ட உபகரணம் அறிமுகமாவது போலத்தான் [...]
’கட்டதொர’ வழங்கும் ட்வீட்டுத்துவம் – ட்வீட்டர் போட்டி
ட்வீட்டர் மகா ஜனங்களுக்கான போட்டி இது! ஒரு தத்துவத்தையே ஒரு ட்வீட்டில் அடக்கி விட வேண்டும். எப்பவும் அதானே செஞ்சிட்டிருக்கோம் என்கிறீர்களா? பிரச்னையில்லை.. இப்போ நம்ம கலக்கல் ‘கட்டதொர’ (Twitter ID : @kattathora) சிறந்த ட்வீட்டுத்துவத்திற்கு பரிசு வழங்கப் போகிறார். முதல் பரிசு : ரூ 1,000 இரண்டாம் பரிசு : ரூ. 500 மூன்றாம் பரிசு : ரூ. 250 ஆறுதல் பரிசுகள் : 10 பேருக்கு ரூ. 100 விதிமுறைகள் : ரூம் [...]
தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்
கட்டுரை.காம் வாசகர்கள், படைப்பாளிகள் அனைவருக்கும் எங்களது இதயம் கனிந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்! இன்று போல் என்றும் வாழ்க!!





