இணையத் தமிழ் கட்டுரை உலகம்

கடையநல்லூரில் தாலிபான்கள்?

பிரபல பத்திரிகையாளர் ‘கவின்மலர்’.

ஊடகத் துறையில் பொறுப்புணர்ந்து செயல்படும் ஒரு சில பத்திரிகையாளர்களில் இவரும் ஒருவர்.

இன்று காலையில் இவரது ஃபேஸ் புக் பக்கத்தில் அவர் விடுத்திருந்த செய்தி :

நண்பர்களே! ஒரு அவசர உதவி. இஸ்லாமிய நண்பர் ஒருவர் கடையநல்லூர் பகுதியில் இருக்கிறார். அவர் இறையில்லா இஸ்லாம் என்கிற தளத்தில் இருந்து நாத்திகம் பேசும் கட்டுரையொன்றை பேஸ்புக்கில் ஷேர் செய்தார் என்பதற்காக, அவரை ஊர்விலக்கம் செய்திருக்கிறது ஜமாத். இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜமாத் கூட்டத்தின் முடிவில் அவருக்கெதிராக ‘பத்வா’ அதாவது அவரை அங்க ஹீனம் செய்யும் முடிவை எடுக்க இருக்கிறது. அவரது மனைவியையும் அவரை விவாகரத்து செய்யும்படிச் சொல்லியிருக்கிறது ஜமாத். தென்காசிக்கு அருகேயுள்ள கடையநல்லூர் பரசுராமபுரம் ஜும்மா பள்ளிவாசலில் நடக்கிறது கூட்டம். இந்த காட்டுமிராண்டித்தனத்துக்கு எதிராக யாராவது அவருக்கு உதவ முடியுமா? என்னால் முடிந்த வரை பத்திரிகையாளர்களுக்குத் தகவல் தந்திருக்கிறேன். பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், சமூக அமைப்புகள், இயக்கங்கள் அனைவருக்குமான வேண்டுகோள் இது.

இந்தத் தகவலையடுத்து என்ன செய்யலாம் என்று அனைவரும் யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் அடுத்த தகவல் அவர் பகிர்ந்தது :

Kavin Malar கவின் மலர் அங்கு ஊரே திரண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 8000 பேர் என்கிரார் நண்பர. அவர் செந்தமிழன் ஷா என்கிற பெயரில் பேஸ்புக்கில் இருக்கிறார். அவர் எந்தக் கட்டுரையை ஷேர் செய்தார் என்று அவருடைய பக்கத்துக்குச் சென்று தெரிந்துகொள்ளுஙகள் நண்பர்களே

என்ன செய்யலாம் என்று பலரும் ஆலோசித்துக் கொண்டிருக்கையில் அதே திரியில் ஒரு நபர் அளித்திருக்கும் பின்னூட்டம்..

Jafferali Jahafar கணிணி கிடைத்துவிட்டது என்று முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கும் நபியை பற்றியும் அவரை பின்தொடர்ந்த சகாபாக்கள் பற்றியும் தாறுமாறாக எழுதிய இவனை என்ன வேண்டுமானாலும் செய்யலாம்…காவல் துறையோ,சமூக இயக்கங்களோ எதுவும் இவனை காக்கமுடியாது..இவனது முடிவு மிகவும் கொடூரமாக இருக்கு..

மேற்படி செந்தோழன் ஷா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்ததாகச் சொல்லப்படும் ‘இறையில்லா இஸ்லாம்’ என்ற தளம் இது தான் : http://iraiyillaislam.blogspot.in/

அவரது ஃபேஸ்புக் பக்கம் : https://www.facebook.com/profile.php?id=100002785517917&sk=wall

எங்கே சென்று கொண்டிருக்கிறோம் நாம்?

***

கடையநல்லூரைச் சேர்ந்த வெளிநாடுவாழ் நண்பர் ஒருவர் அளித்துள்ள பின்னூட்டம் :

Mohamed Hushain இறையில்லா இஸ்லாம் என்ற தளத்திற்கும், இந்த சம்பவத்திற்கும் எதுவும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. முதலில் இது ஒரு உண்மை இல்லா பதிவு. நேற்று ஒரு பிட் நோட்டீஸ் விநியோகம் சம்பந்தமாக ஏற்பட்ட கைகலப்பு தொடர்பாக ஏற்பட்ட பிரச்சன்னை. தோழியின் பதிவில் இருக்கும் “# ஜமாத் கூட்டத்தின் முடிவில் அவருக்கெதிராக ‘பத்வா’ அதாவது அவரை அங்க ஹீனம் செய்யும் முடிவை எடுக்க இருக்கிறது. அவரது மனைவியையும் அவரை விவாகரத்து செய்யும்படிச் சொல்லியிருக்கிறது ஜமாத். தென்காசிக்கு அருகேயுள்ள கடையநல்லூர் பரசுராமபுரம் ஜும்மா பள்ளிவாசலில் நடக்கிறது கூட்டம்.# ” முழுக்க கற்பனை. உண்மைக்கு புறம்பானது. வன்மையாக கண்டிக்கதக்கது. அப்படி ஒரு கூட்டம் முதலில் நடக்கவும் இல்லை நடக்க போவதும் இல்லை.

***

இந்தப் பிரச்னை குறித்து கடையநல்லூர் இணைய தளம் வெளியிட்டுள்ள செய்தி :

**

பிற்சேர்க்கை : (மதியம் 3:22க்கு)

Kavin Malar கவின் மலர்

நண்பர்களே! அந்தக் கூட்டம் முடிந்தது. அவரை எதுவும் பேசவிடவில்லை என்கிறார் த்ரோப் ஷா. அங்கே போலீஸ் வெளியில் நின்றது. ‘இவரை இன்று முதல் இஸ்லாத்திலிருந்து விலக்கி வைக்கிறோம். இவரை காபிர் என்று இனி சொல்லக்கூடாது. இவரது குடும்பத்தாரையும் யாரும் தொடர்புகொள்ளக்கூடாது’ என்று தீர்ப்பு சொல்லியிருக்கிறார்கள். கூட்டத்தில் அவரை அடிக்கப் பாய்ந்திருக்கிறார்கள். அவரை ஒரு அறைக்குள் அடைத்து வைத்து ஒரு சிலர் பாதுகாக்க முய்ல, அறைக் கதவை உடைத்துக் கொண்டு சிலர் அவரை அடிக்கப் பாய்ந்திருக்கிறார்கள். அவருடைய வார்த்தைகளில்..’’போஸீஸ் இல்லையென்றால் என்னை இன்றே கொன்றிருப்பார்கள். போலீஸ் வண்டிக்குள் என்னை ஏற்றியபின்னும் உள்ளே நுழைந்து அடித்தார்கள். போலீஸ் வண்டியைஅ அடித்தார்கள். என்னிக்கு இருந்தாலும் எங்க கையாலதான் உனக்கு சாவு’ என்றும் மிரட்டினார்கள்.’’. இப்போது தோழர் போலீஸ் பாதுகாப்பில் இருக்கிறார்.

ஆனால் மற்றொருவர் கூறியிருப்பது :
Venkataraman Premsagar எனக்கு கிடைத்துள்ள தகவல் கூட்டம் ஏதும் கூடவில்லை…சம்பந்தப்பட்ட நபரின் வேறு பிரச்சினைக்குரிய நடவடிக்கைகள் பலவற்றுக்காக கண்டிக்கப்பட்டுள்ளாரென்றும் அவர் குடும்பதினரிடமும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளாரென்றும்…ஜமாத்தே இன்று இரவுதான் கூட இருப்பதாகத் தகவல். தற்போது காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மேலும் சில தகவல்களிருப்பினும் உறுதி செய்யப்படாததால் பின்னர் தேவையிருப்பின் பார்ப்போம். 
கடையநல்லூர் இணைய தளச் செய்தி : (மாலை 6:00 மணி)
கடையநல்லூர் பள்ளியில் ‘மக்கட்டி துராஃப்’ காஃபிர் என்று அறிவிப்பு
இவர் இஸ்லாத்துக்கு எதிரான கருத்து கொண்டவர். தனது இணைய தளத்தில் இஸ்லாத்துக்கு எதிராக எழுதி கடையநல்லூர் முஸ்லீம்களின் கோபத்துக்கு உள்ளானார்.
இன்று பள்ளிவாசலில் வைத்து அவரை ஜாமத்தார்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வைத்து விசாரித்ததில் அவர் தான் எழுதியதை நியாயப்படுத்திப் பேசினார். இதைத் தொடர்ந்து அவரை காஃபிர் என்று அறிவித்து அவரிடம் கையெழுத்தும் வாங்கப்பட்டது.இஸ்லாத்தை பற்றியும் நபிமாரைப் பற்றியும் தவறாக எழுதிய நபரை அடித்து உதைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் எதிர்ப்பலைகளுக்கு மத்தியில் போலீஸார் அவரை கூட்டிச் சென்றனர்.
இந்தக் கடையநல்லூர் இணைய தளத்தில் பின்னூட்டம் இட்டிருக்கும் சிலர். (இந்தியாவில் தானே இருக்கிறது கடையநல்லூர்?!)

, , ,

8 thoughts on “கடையநல்லூரில் தாலிபான்கள்?

 • jaisankar says:

  //எங்கே சென்று கொண்டிருக்கிறோம் நாம்?// எங்கேயும் போகலை. ஒரே இடத்துல இருக்கோம். மத நல்லினக்கம் வாழ்க.

 • ANONONYMOUS says:

  என்ன அன்பான பின்னூடங்கள் …இஸ்லாம் உண்மையான அமைதி மார்க்கம் தான்….உண்மையை வெளிய சொன்ன இப்படிதான் பாஞ்சுகிட்டு வருவாங்களோ????? இனி அந்த பன்னாட பெரியார் தாசன் குல்லாவ போட்டுகிட்டு இந்து மதம் பத்தி பேசட்டும்..(edited)

 • S.IbrHIM says:

  தனது பொருளாதார பின்னடவை சரிகட்ட ,பேரழிவு ஆயுதங்கள் என்று பொய்த்துப்போன குற்றச்சாட்டை வைத்து அந்நிய நாட்டில் அத்து மீறி புகுந்து பேரழிவு குண்டுகளை வீசி அப்பாவி மக்களிக் கொன்று ,அரபுநாடுகளின் என்னை மார்கெட்டை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்க கிறிஸ்தவர்களை விட கடையநல்லூர் மக்கள் என்ன பாவம் செய்துவிட்டார்கள்? மேலும் தனது நாணய மாற்றத்தை டாலரிலிருந்து யுரோவுக்கு மாற்றியதை விட சதாம் என்ன கொடுமை செய்தார்?

  தாலிபான்கள் ஆட்சி செய்கிறார்கள் என்பதற்காக ஜப்பான் ஏற்கனவே ஆப்கான் அரசுடன் செய்து இருந்த குழந்தைகளுக்கு உயிர்காக்கும் மருந்துகளை அனுப்பவிடாமல் தடுத்தவிட கடையநல்லூரில் என்ன கொடுமை நடந்துவிட்டது?
  ஒரு கண்டைனரில் அறுநூறுக்கு மேற்பட்ட ஆப்கான் மக்களை அடைத்து சென்ற மனித கொடூர செயலைவிட கொடூரம் செய்ய அமெரிக்க அயாவ்க்கியர்களைத்தவிர யாருக்கு மனம் வரும்?

 • நல்லூர்முரசு ஜாகிர் says:

  எந்த ஒரு விஷயத்தையும் தீர விசாரிக்காமல் பொய்யான தகவலை செய்தியாக பரப்பியிருக்கும் இவர் எப்படி பாராட்டுக்குறிய நிருபராவார். முதலில் நீங்கள் வெளியிட்டிருக்கும் இந்தச்செய்தியை வாபஸ் பெற வேண்டும்

 • muhammed halith says:

  ANONONYMOUS @ என்னடா பண்ணுவ!

  muhammedhalith@yahoo.in
  122.164.65.42

 • asan mohideen says:

  ANONONYMOUS @ என்னடா பண்ணுவ!

  asanajith@gmail.com
  117.206.90.152

 • அப்துல் பாஸித் says:

  இந்த பதிவை பேஸ்புக்கில் பதிந்த கவின் மலர் அவரின் இந்த பதிவிற்க்கு சகோதரர்கள் வழங்கிய பதிவையும் இங்கு காப்பி பேஸ்ட் செய்து அனுப்பியிருந்தால் உண்மைவிரும்பியாய் இருந்திருப்பார் ??????ஆனால் இங்கு இதை இந்த தலைப்பில் பதிந்த கட்டுரையாளர் அதற்க்கு தாலிபான்களின் பெயரை வைத்தது எதனால் பாஸிஸ சங்பரிவாரின் கருத்தை கம்யூனிஸபோர்வையில் பதிந்ததின் நோக்கமென்ன ?துராப்ஷா என்பவன் இஸ்லாமிய பெயரில் இருந்துகொண்டு இஸ்லாத்தை பழித்ததால் இந்த அறிவிப்பு செய்யப்பட்டது அதற்க்கு அந்த முட்டாளும் கையெளுத்து வைத்துவிட்டு இப்போது அனுதாபம் தேட முயற்ச்சிப்பது எதற்க்கு ஒருவன் நான் முஸ்லீம் இல்லை என்கிறான் அதை ஊர்கூடி அறிவிக்கிறது அவனும் ஏற்றுக்கொள்கிறான் இதில் எங்கு தாலிபானிசத்தை கண்டீர்கள் தேவையற்ற பதிவு அவனுக்கு வக்காளத்து வாங்கும் கவின் மலரின் முக நூலின்(பேஸ் புக்) முகப்பில் இதற்க்கு தக்க பதில் வழங்கப்பட்டுள்ளது அதையும் இங்கு பதிவீர்களா????

 • shajahan.S says:

  இந்த புதிய செய்தியையும் உங்கள் ஊடகத்துறையில் பொறுப்புணர்ந்து செயல்படும் ..!!! (ச்சே… தமிழில் எவ்வளவு அழகான வார்த்தை பொறுப்பில்லாத ஒரு பாசிச நிருபருக்கு) பகிர்ந்து கொள்ளுங்கள். எம் மதமும் சாரா அந்த ஒருபிறவி இப்போது கடையநல்லூரில் கெஞ்சி, அழுது, புலம்பி தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு மீண்டும் மனிதனாக மாறி விட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>