வங்கிகளுக்கு இடையே உடனடி மணி ட்ரான்ஸ்ஃபர்
நம்ம ஊரில் வங்கிகளில் கணினி வந்ததே பெரிய விஷயம். ஒரு காலத்தில் அடுத்தடுத்த ஊர்களில் உள்ள ஒரே வங்கியின் கிளைகளுக்குள்ளேயே பணப் பரிமாற்றம் செய்வதெல்லாம் பெரிய வேலையாகக் கருதப்பட்டதுண்டு.
இப்போது எல்லாம் ஆன் லைன் தான்! ஆனாலும் வெவ்வேறு வங்கிகளுக்கு இடையேயான கணக்குகளுக்கு பணம் மாற்றும் போது எக்கச்சக்க கட்டுப்பாடுகள்.
NEFT எனும் National Electronic Funds Transfer வழியாக பதிவு பெற்ற வங்கிகளின் கணக்குகளுக்கு இடையில் பணப் பரிமாற்றம் செய்யலாம். ஒரு தடவை மாற்றும் போது அதிகபட்சமாக 50,000 ரூபாய் வரை மாற்ற இயலும்.
வார நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை மணிக்கொரு தடவையாக பதினோரு தடவையும், சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை ஐந்து தடவையும் NEFT மூலமாக பணப்பரிமாற்றம் செய்யலாம்.
இதன் வழியாக நீங்கள் உங்களுடைய வங்கியிலிருந்து அனுப்பும் பணம் மணிக்கொரு தடவை மேலே குறிப்பிட்ட நேரங்களில் NEFT சர்வீஸ் செண்டர் எனும் மத்திய இடத்திற்கு பண மாற்றம் குறித்த தகவல்களை அனுப்பும். அங்கிருந்து பணம் பெறும் பயனாளியின் வங்கிக்கு ‘கோஞ்சாமி முன்சாமிக்கு முன்னூறு ரூவா பணம் அனுப்பிருக்காருப்பா’ என்ற தகவலை அனுப்பும். முன்சாமி கணக்கும் வைத்திருக்கும் வங்கி அந்த முன்னூறு ரூபாயை அவரது கணக்கில் வரவு வைக்கும். எப்படியும் சில நிமிடங்களில் இருந்து சில மணி நேரங்கள் வரை ஆகலாம் பணம் முன்சாமியின் கணக்கில் வரவு வைக்கப்படுவதற்கு. இந்த முறையில் பணம் அனுப்புவதற்கு முன்சாமி வங்கிக் கணக்கு எண், அவருடைய வங்கியின் IFSC கோடு (Indian Financial System Code) ஆகியவை கண்டிப்பாக தேவை.
கோஞ்சாமி தன்னுடைய ஆன்லைன் கணக்கின் வழியாக NEFT ட்ரான்ஸ்ஃபர் செய்ய முதலில் முன்சாமியின் கணக்கை தன்னுடைய ஆன்லைன் அக்கவுண்டில் இணைக்க வேண்டும். சில வங்கிகளில் இது உடனடியாக இணைக்கப்படும். சிலவற்றில் 24 மணி நேரம் எடுக்கும். ஒரு முறை அப்படி இணைத்து விட்டால், பிறகு அடுத்த தடவை அனுப்பும் போது மீண்டும் இணைக்க வேண்டியிருக்காது.
குறைந்த பட்சம் 5 ரூபாயிலிருந்து சர்வீஸ் சார்ஜ் துவங்கும்.
அடுத்தது RTGS (Real time Gross Settlement). இதில் குறைந்த பட்சம் இரண்டு லட்ச ரூபாயிலிருந்து டிரான்ஸ்ஃபர் செய்யலாம். இதில் உடனடியாக பணப் பரிமாற்றம் நிகழும். அதிகபட்சம் இரண்டு மணி நேரங்களுக்குள் முன்சாமியின் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டிருக்க வேண்டும். NEFT போலவே இவற்றுக்கும் வார நாட்கள், வார இறுதி நாட்கள் என்று வேலை நேரம் உண்டு. வங்கிக்கு வங்கி இது மாறுபடும்.
30 ரூபாயிலிருந்து 55 ரூபாய் வரை சார்ஜ் ஆகும்.
இதெல்லாம் வங்கி வேலை நாட்களில், வேலை நேரங்களில் மட்டுமே பயன்படுத்தக் கூடியது.
இப்போது புதிதாக வந்துள்ளது IMMS (Instant/Interbank Mobile Money Transfer). இதன் மூலம் எந்நேரமானாலும், எந்த நாட்களிலும் ஒரு வங்கிக் கணக்கிலிருந்து இன்னொரு வங்கிக் கணக்கும் உடனடியாக பண மாற்றம் செய்து கொள்ளலாம்.
இப்போதைக்கு கீழே உள்ள பட்டியலில் உள்ள வங்கிகளுக்கு இடையே பணமாற்றம் செய்து கொள்ளலாம். விரைவில் கூடுதல் வங்கிகள் இணைக்கப்பட உள்ளன.
| Allahabad Bank | IDBI Bank | Syndicate Bank |
| Andhra Bank | Indian Bank | The A P Mahesh Co-op. Urban Bank Ltd |
| Axis Bank | Indian Overseas Bank | The Hongkong and Shanghai Banking Corporation Limited, India (HSBC India) |
| Bank of Baroda | IndusInd Bank | The Thane Janata Sahakari Bank Ltd |
| Bank of India | Karur Vysya Bank | UCO Bank (UCO) |
| Canara Bank | Kotak Bank | Union Bank of India |
| Catholic Syrian Bank | Lakshmi Vilas Bank | Vijaya Bank |
| Central Bank of India | Oriental Bank of Commerce | Yes Bank |
| Citibank | Punjab National Bank | ICICI Bank |
| Corporation Bank | South Indian Bank | |
| Dena Bank | State Bank of Bikaner and Jaipur | |
| Development Credit Bank | State Bank of India | |
| Dombivli Nagari Sahakari Bank Ltd (DNSB) | State Bank of Mysore | |
| Federal Bank | State Bank of Patiala | |
| HDFC Bank | State Bank of Travancore |
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10-ம் நாளிலிருந்து செயல்படத் தொடங்கியிருக்கும் இந்தத் திட்டம் இன்னும் பலரை எட்டவில்லை.
இதனை உபயோகிக்க உங்கள் வங்கிக் கணக்குடன் மொபைல் வங்கிக் கணக்கு உபயோகிப்பதோ / SMS மூலம் வங்கிக் கணக்கும் உபயோகிப்பதையோ ஆக்டிவேட் செய்திருக்க வேண்டும். பெறுநரும் அப்படியே செய்திருக்க வேண்டும்.
அப்படிச் செய்யும் போது அவர்களுக்கு ஏழிலக்க MMID (Mobile Money Identifier) கொடுக்கப்படும். அதன் மூலம் உங்கள் மொபைலில் தரவிறக்கப்பட்ட உங்கள் வங்கிக்கான மொபைல் சாஃப்டுவேரிலிருந்து பயனாளியின் மொபைல் எண் / MMID எண்ணை உள்ளீடு செய்து உடனடியாக பண மாற்றம் செய்யலாம். அடுத்த சில நொடிகளில் அவருடைய கணக்கில் பணம் வரவு வைக்கப்படுகிறது.
குறைந்தபட்ச கட்டணம் எதுவுமில்லை. 5 ரூபாயிலிருந்து சர்வீஸ் சார்ஜ் இருக்கிறது. அதிகபட்சமாக உங்கள் வங்கி உங்கள் கணக்கிற்கு விதித்திருக்கும் கட்டுப்பாடின் படி பணப்பரிமாற்றம் செய்யலாம்.
IMPS மூலமாக பணம் அனுப்பும் வழிகள் :
பணம் அனுப்ப வேண்டியவர் செய்ய வேண்டியது :
* உங்கள் வங்கியில் மொபைல் பேங்கிங் சர்வீஸில் இணைத்துக் கொள்ளவும். * ஏழிலக்க MMID (MMID) மற்றும் MPIN ஆகியவற்றை வங்கியிடமிருந்து பெற்றுக் கொள்ளவும். * வங்கி சாஃப்டுவேர் அல்லது SMS மூலம் பணமாற்றம் செய்யும் முறையை கேட்டறிந்து கொள்ளவும்.
பணம் பெறுபவர் செய்ய வேண்டியது :
* வங்கியில் கணக்கில் மொபைல் எண்ணை இணைத்துக் கொள்ளவும்..
மொபைல் பேங்கிங் அல்லது SMS பேங்கிங்கில் இணைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை (பணம் அனுப்ப மட்டுமே அது தேவை)
* வங்கியிலிருந்து ஏழிலக்க MMID பெற்றுக் கொள்ளவும்.
பணம் அனுப்பும் முறை :
* Login to the application and select the IMPS menu from the IMPS or
use the SMS facility in your mobile if your bank provides IMPS on SMS
* Get Beneficiary Mobile number and MMID
* Enter Beneficiary Mobile number, beneficiary MMID, Amount and your MPIN to send
* Await confirmation SMS for the debit in your account and credit in beneficiary account
* Note the transaction reference number for any future query
பணம் பெறும் முறை :
* Share your Mobile number and MMID with the remitter * Ask the remitter to send money using your Mobile number and MMID * Check the confirmation SMS for credit to your account from the remitter * Note the transaction reference number for any future query
கல்வி உதவித் தொகை – வாருங்கள் உதவுவோம் எனக்குப் போட்டியாளர் சூப்பர் ஸ்டார் ஒருவரே – பவர் ஸ்டார்






Links to member bank’s IMPS page http://www.npci.org.in/bankmember.aspx
அவசரம் மற்றும் அடிக்கடி பணம் பரிமாற்றம் செய்யும் நண்பர்களுக்கு இவ்விசயம் உதவும் நன்றி