மொபைல் ரீசார்ஜ் கடைகள் – எச்சரிக்கை ரிப்போர்ட்!
மொபைல் ஃபோன்கள் வாழ்வின் இன்றியமையாததாக ஆகி விட்டன.
போஸ்ட்-பெய்டு கனெக்ஷன் என்றால் சம்பந்தமேயில்லாமல் பில் தொகையை எகிறடித்து மிரட்டும் சம்பவங்கள் நிறைய உண்டு என்பதால் பலர் ப்ரீ-பெய்டு கனெக்ஷன் தான் உபயோகப்படுத்துகிறார்கள்.
சமீப வருடங்களில் நாட்டில் டாஸ்மாக்குக்கு அடுத்தபடியாக மக்கள் கூட்டம் அள்ளும் கடைகளாக இந்த மொபைல் டாப்-அப் கடைகள் தான் இருக்கின்றன.
பத்து ரூபாயிலிருந்து தொடங்கி ப்ரீ-பெய்டு மொபைலுக்கு இங்கே தான் டாப்-அப் செய்கிறார்கள் மக்கள்.
நீங்கள் தொடர்ந்து இப்படி ப்ரீ-பெய்டு டாப்-அப் செய்ய கடைகளுக்குச் செல்கிறீர்களா?
உங்களுக்கான எச்சரிக்கை ரிப்போர்ட் இது :
- கடைகளில் டாப்-அப் செய்யக் கேட்கும் போது ஒரு நோட்டுப் புத்தகத்தில் உங்கள் கைப்பேசி எண்ணை குறித்து வைப்பார்கள். சில இடங்களில் கைப்பேசி எண்ணையும், தொகையையும் குறித்து வைப்பார்கள். அடுத்த முறை அப்படி அவர்கள் குறிக்க முயலும் போது நீங்கள் ஒரு சிறு துண்டுத் தாளில் நம்பரை குறித்துக் கொடுங்கள். அல்லது கடைக்காரர் மொபைல் மூலமாக ரீ-சார்ஜ் செய்யும் போது அவரின் மொபைலை வாங்கி அதில் உங்கள் எண்ணை உள்ளிடுங்கள்.
- உங்கள் எண்ணை எழுதி வைக்கும் நோட்டுப் புத்தகங்கள் அந்தந்த ஊரில் மொபைல் ஃபோனுக்கு விளம்பரங்கள் எஸ்.எம்.எஸ். அனுப்பி வைக்கும் நபர்களுக்காகவே எழுதப்படுபவை. ஆயிரம் மொபைல் எண்களுக்கு நூறு ரூபாய் என்கிற ரீதியில் இவை வாங்கப்பெறுகின்றனவாம். இதில் தொகையும் சேர்த்து எழுதப்பட்டால், நீங்கள் அதிகமான தொகைக்கு டாப்-அப் செய்திருந்தால் நீங்கள் ‘துட்டு பார்ட்டி’ என்று ரிக்கார்ட் ஆகும் விளம்பர ஆட்களிடம்.
- உங்களுடைய மொபைல் எண்ணை எதற்காக கண்ட விளம்பர ஆட்களிடம் கொடுக்க வேண்டும்?
- சமீப காலமாக ஒரு சில இடங்களில் டாப்-அப் செய்ய வருபவர்களைப் பற்றியும் சங்கேத குறியீடுகளை மொபைல் எண்ணுக்குப் பக்கத்திலேயே குறித்து வைக்கும்படி சில விளம்பர நிறுவனங்கள் சொல்லி வருவதாகவும் தகவல்.
- டாப்-அப் செய்ய வந்தது ஆணா, பெண்ணா? பள்ளி, கல்லூரி மாணவர்களா, மாணவிகளா? முதியவரா? எழுதப் படிக்கத் தெரிந்தவர் போன்ற தோற்றம் உடையவரா? என்பதற்கெல்லாம் சங்கேதக் குறியீடுகள் கொடுத்து டாப்-அப் செய்யும் நம்பருக்கு அருகிலேயே அந்தக் குறியீடுகளையும் சேர்த்து வைக்குமாறு சொல்கிறார்களாம்.
தொலை தொடர்புத் துறை ஒழுங்குமுறை ஆணையம் – ட்ராய் – “Do Not Disturb” ரிஜிஸ்ட்ரியில் பதிவு செய்து வைத்திருப்பவர்களுக்கு அனுமதியின்றி அழைப்பு, விளம்பர எஸ்.எம்.எஸ்.கள் அனுப்புகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொடர்ந்து எச்சரிக்கை செய்து வந்தாலும், நடைமுறையில் இந்த மாதிரியான நடவடிக்கைகள் குறைவு தான்!
சமீபத்தில் கிருஷ்ணகிரிக்குச் சென்றிருந்த போது தவிர்க்க இயலாமல் அங்குள்ள ஒரு மொபைல் ரீ-சார்ஜ் கடையில் 350 ரூபாய்க்கு டாப்-அப் செய்து விட்டு வர நேரிட்டது. மறுநாளிலிருந்து கிருஷ்ணகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊரிலுள்ள விளம்பரதாரர்கள் ‘டேட்டா கார்டு’ மற்றும் இதர பொருட்களுக்காக தொடர்ந்து பல எஸ்.எம்.எஸ்.களை அனுப்பி வருகிறார்கள்.
இதைத் தவிர டாப்-அப் செய்ய வருபவர்கள் முதியவர்களாக, எழுதப் படிக்கத் தெரியாதவர்களாக, கிராமத்தில் இருந்து வருபவர்களைப் போல இருந்தால் அவர்களுக்கு டாப்-அப் செய்யாமலேயே, அப்படி செய்ததைப் போல தாங்களாகவே ஒரு எஸ்.எம்.எஸ்.ஸை பேருக்கு அனுப்பி விட்டு அந்தத் தொகையை ‘ஆட்டையப்’ போடும் அநியாயமும் நடந்து வருவதாகக் கேள்வி.
எனவே, மொபைல் டாப்-அப் செய்யும் போது எச்சரிக்கையாக இருங்கள்! இயன்றவரையில் ஆன் லைனில் அந்தந்த மொபைல் ப்ரொவைடர்களின் இணைய தளத்திலிருந்து டாப்-அப் செய்து கொள்ளுங்கள்!
கோவை : ப்ரூக்ஃபீல்டு பகல் கொள்ளை ஏர்டெல் – Fraudband விலை உயர்வு







Leave a Reply