இணையத் தமிழ் கட்டுரை உலகம்

நீ எதுக்கு தலைவா இந்தப்படத்துலே நடிக்க ஒத்துகிட்ட? – கட்டதொர கடிதம்

அன்புத் தலைவா விஜய். உன் அப்பாவி ரசிகன் எழுதிக் கொள்(ல்)வது.

கடுப்பைக் காட்டுறதுக்கு முன்னாடி, உனக்கு பொங்கல் வாழ்த்தை சொல்லிடுறேன்!

முதல்ல யாரைக் கேட்டு இந்த படத்திலே நடிக்க நீ ஒத்துக்கிட்டே? நீ ரீமேக்ல மட்டும்தான் நடிப்பேன்னு உலகத்துக்கே தெரியும். ஆனா  இப்புடி செத்தவன் வாயில வெத்தலையை வெச்ச மாதிரியான ஒரு கேரக்டர்லே உன்னை பார்க்க முடியாம பாப்கார்னை வாய்ல திணிச்சுகிட்டு நான் குலுங்கிக் குலுங்கி அழுதது எனக்கு மட்டும் தான் தெரியும் தலைவா!

கதை – அந்த கருமத்தை நான் என் வாய்ல வேற சொல்லணுமா?

புள்ளைங்க விருப்பப் படுறதை படிக்க வைங்க – இதான் ஒன் லைனர், முழுக் கதை எல்லாமே!

தலைவா, உனக்கு படிப்பு வராம உங்க அப்பா நடிக்க வைச்சாரு. உனக்கு நடிப்பாவது வரணும்னு நாங்களும்,15 வருஷமா உன் மொக்கை படத்தை எல்லாம் ஹிட்டு படமாக்கினோம்.  இப்ப வந்து விருப்பப்பட்டதை படின்னு அட்வைஸ் பண்ணினா நாங்க எங்க போறது?  முதியோர் கல்வியிலே ஏது தலைவா விருப்பப் பாடம்?!

காட்டு காட்டுன்னு காட்டுவியே, இதுல ஒரு தடவை கூட பஞ்ச் டயலாக்கை நீ காட்டவே இல்லியே. நீ ஏன் தலைவா, இப்படி ஒரு படத்தை ஒத்துகிட்ட?

சீனுக்கு சீன், கேமரா ஆங்கிள் கூட துளிக்கூட மாத்தாம எடுக்க ஷங்கர் எதுக்கு தலைவா? டெய்லி 200 ரூவா பேட்டா வாங்குற அசோசியேட்டு டைரக்டர் கூட இதை எடுக்கலாமே!? இதெல்லாம் தெரிஞ்சிருந்தும் நீ எதுக்கு தலைவா ஒத்துக்கிட்ட?

வழக்கமா ரோலிங் ஷட்டரை பொளந்துக் கிட்டு வர நீ,சைலண்டா ஒரு கோல்ஃப் விளையாடுரவன் பையை முதுகிலே சொமந்து கிட்டு வர! அதிலேயே என் மனசு நொறுங்கி போய்டுது.

தலைவா, அது மட்டும் இல்லாம, உன்னை ராகிங் பண்ணறதுக்காக,  உன் ஜீன்ஸ்குள்ளேயே ஒருத்தன் தண்ணியை ஊத்துறான்.  ஏர்லே டைவ் அடிச்சு அவன் குரல் வளையைக் கடிச்சுத் துப்பாம, ரூமுக்குள்ள போய், கரண்டு ஷாக் குடுக்குற! உன் கண் பார்வையிலேயே ஆயிரம் மெகா வாட் ரெடி பண்ணி க்ரிட்ல குடுக்கலாம். அதை விட்டுட்டு நீ என்னடான்னா குண்டு பல்பைப் புடுங்கி எதிரிக்கு ஷாக் குடுக்குறே. எதிரிக்கு மட்டுமா, எங்க எல்லாத்துக்கும் தான்! அந்த சீனிலேயும் தியேட்டரே குலுங்கிக் குலுங்கிச் சிரிக்குது. ஆனா உன் உண்மை ரசிகன் வயிரு எரியுது. நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?

ஹிந்தியில சூப்பர் ஹிட்டுன்னு ஃபர்ஸ்ட் கிளாஸ் டிக்கட் எடுத்தவங்க எல்லாம் பேசிக்கிறாங்க. அமிர்கான் அதுல இன்னும் சூப்பரா நடிச்சுருப்பாருன்னும் பேசிக்கிறாங்க. அதெல்லாம் 30 ரூவா டிக்கட் எடுத்து வந்து ஸ்கிரினுக்கு பக்கத்துல பாக்குற எனக்குத் தெரியாது தலைவா.

நீ ’நடிக்கற’துனால எவ்வளவு பிரச்னை பாத்தியா? பேரே தெரியாத இன்னொருத்தனைப் பாத்து உன்னை கம்பேர் பண்றாங்க. என்னைக்காச்சும் பேரரசு இப்படி ஒரு கெட்ட பேரை உனக்கு உண்டு பண்ணிருப்பாரா. யோசி தலைவா. நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?

விண்வெளியில பென்சிலிலா எழுதலாமே, எதுக்கு இவ்வளவு செலவு பண்ணி பேனா கண்டுபுடிக்கணும்னு நீ கேட்கும் போது, தியேட்டரே கைதட்டுது. ஆனா பக்கத்து சீட்டுக்காரனுங்க, ’இந்தப் படத்தை டப்பிங் பண்ணி உட்டுருக்கலாமே.. எதுக்கு இம்புட்டு செலவு பண்ணி ரீமேக் பண்ணிருக்கானுங்க’ன்னு கேட்குறாங்க. விவ(கா)ரமான பயலுங்க போல! நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?

ஸ்க்ரின்ல வந்து போற எல்லா பயமக்களுக்கும் நல்லது பண்றியே.உன்னையே நம்பி இருக்குற, என்னைய மாதிரியான ‘சுறா’ ரசிகன் நிலைமையை நினைச்சுப் பாத்தியா? ஹிந்தியில கரினா கபூர் ஜீரொ சைஸ்ல இருந்தாங்கங்குறனால, பத்து நாள் டயரியால அடிபட்ட மாதிரி இருக்குற இலியானவை புடிச்சு போட்டிருக்காங்க. ஹன்சிகா மாதிரி பல்கியான ஃபிகரோட உன்னைப் பாத்துபுட்டு, இந்த மாதிரி பாக்க வயித்தெறிச்சலா இருக்கு தலைவா. நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?

அம்பது பேரு உன்னைச் சுத்தி நின்னாலும் கரண்டு கம்பத்தைப் புடுங்கி அம்பது செகண்டுலே எல்லாரையும் சாய்ச்சுப் புடுவியே தலைவா, இதுல வரவன் போறவன்கிட்ட எல்லாம் அறை வாங்குறியே தலைவா. இந்த கண்ராவிய பார்க்கவா நான் காசு குடுத்து உன்னைப் பார்க்க வந்தேன். நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?

நீ ஸ்பெல்லிங்க மாத்தி சத்யன் அதை ஸ்டேஜ்ஜிலே படிச்சு எல்லாரும் கைதட்டி சிரிக்குறாங்க. அந்த மொக்கையைப் பாக்க சகிக்காம சீட்டுக்கு கீழே படுத்துகிட்டு நான் அழுதேன் தலைவா.  நான் என்னவோ வயிரு குலுங்கி சிரிக்கிறதா எல்லா பயலும் நினைச்சுக்கிட்டு குமுறி குமுறிச் சிரிக்கிறானுங்க தலைவா. உன் உயிர் ரசிகனுக்கு இந்த அவமானம் தேவையா? நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?

இண்டர்வெல் ப்ளாக்ல , பஞ்சவன் பாரி வேந்தன் (உன் பேருதான் தலைவா) ஃபோட்டோ பக்கத்துல சூர்யா போட்டோவைப் பாத்து பதறிப் போய் ஜீவாவும், ஸ்ரீகாந்தும் நீ காணம போய்ட்டியோன்னு திகைச்சுப் போய் நிக்குறாங்க. அதைப் பாத்துபுட்டு இண்டர்வெல்லுக்கு அப்புறம் நீ வரமாட்டியோன்னு நினைச்சு உன் ரசிகர்கள் பாதிப் பேரு தியேட்டரை விட்டு வெளியே போய்ட்டாங்க தலைவா. இந்த மாதிரி அப்பாவி ரசிகன் வாயில மண்ணை அள்ளிப் போட்டியே. நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?

பொதுவா கனவு சீன் ஃபாரின் பாட்டுலே எல்லாம் தனியா நீ மட்டும் போய் மலை பக்கம் ஆடிக்கிட்டு இருப்பியே தலைவா. இதுலே கும்பல் கும்பலா வந்து உன் ஆட்டத்த காலி பண்ணி புட்டாய்ங்களே தலைவா. உன் குத்தாட்டத்த பாத்து ரசிகனானவன் வாயிலேயே குத்தி பழிவாங்கிட்டியே தலைவா. நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?

நீ ஸ்கிரின்ல வந்த உடனே கை தட்டின உன் உயிர் ரசிகன் நாலு பேர்ல நானும் ஒருத்தன். இது உன் படம் இல்லைன்னு ஒரு வார்த்தை சொல்லிருந்தா, டிக்கட்டு காசுல மானங்கெட்ட மானிட்டர ஒரு குவார்ட்டர் குடிச்சுப்புட்டு, குப்புறப் படுத்து தூங்கிருப்பேனே தலைவா! நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?

க்ளைமாக்ஸ்ல நீ குறுந்தாடி வச்சுகிட்டு வரப்பவே நீ தான் அந்த கொசகசா பஸபுகழ் விஞ்ஞானின்னு தியேட்டரில டயர்டாயி தூங்குற குழந்தைப்புள்ள கூட சொல்லிப்புடும். (இந்த விஞ்ஞானி பேரை சரியா சொல்றவனுக்கு ஏதாவது பரிசு குடு தலைவா!) சரி..படம் ஃபுல்லா அரை வாங்கியிருக்கியேங்கிற கடுப்புல உட்காந்த உன் ரசிகனை , க்ளைமாக்ஸ்லயும் மிதி வாங்கி  சின்னா பின்னமாக்கிட்டியே தலைவா. நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?

நீ விஞ்ஞானியா நடிக்குற துணிச்சல் உனக்கு இருக்கலாம் தலைவா. ஆனா 30 ரூவா குடுத்து முன்னாடி சீட்ல உட்காந்து பாக்குற என்ன மாதிரி ரசிகர்களுக்கு அந்த தைரியம் எல்லாம் இல்லை தலைவா! நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?

எல்லாரும் முழு டவுசரைக் கழட்டிட்டு அடிக்கடி கால்ல உழுரானுங்க. நல்லவேளை, இலியானாவுக்கு அப்படி ஒரு சீன் வெக்கலை! நான் வீட்டுக்கு வந்து பேண்ட் கழட்டும் போது படம் நியாபகத்துக்கு வந்து தொலைக்குது. இது உண்மையிலேயே டைரக்டருக்கு வெற்றிதான் தலைவா. ஆனா உன் படத்துக்குப் போயிட்டு வந்தா மந்திரிச்சு உட்டா மாதிரி படம் முழுக்க வரும் உன் மூஞ்சி தானே தலைவா நாலு நாளைக்கு நியாபகத்து வந்து பயமுறுத்திட்டே இருக்கணும். நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?

குருவி படத்த பாத்து சட்டைய கிழிச்சுட்டு ஓடின பயமக்கள் எல்லா கைதட்டி படத்த ரசிக்குதுங்க. குருவி படத்தையும் ஹிட்டாக்கின என்ன மாதிரி ரசிகர்கள் மூட் அவுட்டு ஆய்டுவாங்கன்னு புரிஞ்சிக்க தவறிட்டியே தலைவா! நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?

இதே ரேஞ்சிலே இன்னொரு படம் நீ குடுத்தா நாங்க எல்லாம் ‘தல’ ரசிகரா மாறிடுவோம். அப்புறம் ‘ஆல் ஈஸ் வெல்’ அப்படீன்னு நீ சொல்ல முடியாது. புரியுதா தலைவா?!

(ஹிந்தி படம் பார்க்காதவர்களுக்கு இந்தப் படம் ஒரு பொங்கல் விருந்து என்பதில் சந்தேகமே இல்லை. பொதுவான விஜய் ரசிகர்களின் உள்ளக்கிடங்கை தான் இங்கே எழுதியிருக்கிறேன். யார் மனதையும் புண்படுத்துவதற்காக இல்லை!)

கட்டுரையாளர் : கட்டதொர

நமது தளத்தில் 6 கட்டுரை(கள்) எழுதியுள்ளார்..

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
Share

, , ,

75 thoughts on “நீ எதுக்கு தலைவா இந்தப்படத்துலே நடிக்க ஒத்துகிட்ட? – கட்டதொர கடிதம்

 • நீ எதுக்கு தலைவா இந்தப்படத்துலே நடிக்க ஒத்துகிட்ட? – கட்டதொர கடிதம் link to t.co via @kattathora.

 • ஒப்புக் கொள்ளவே இயலாத ஒரு பதிவு ! (நான் விசய் ரசிகன் அல்லன்..) இருந்தாலும் மக்களுக்கு சேர வேண்டிய ஒரு கருத்தை படம் எடுத்த மக்களை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை இப்படி போட்டு தாக்கி இருக்க வேண்டாம்

  உரிமையுடன்,
  நான்.

  • கட்டதொர says:

   இதை ஒரு சுரா விஜய் ரசிகனின் கண்னோட்டத்திலிருந்து பார்த்தால் ரொம்ப கரெக்ட்..

 • கலக்கல் துரை :-) @kattathora நீ எதுக்கு தலைவா இந்தப்படத்துலே நடிக்க ஒத்துகிட்ட? – கட்டதொர கடிதம்: link to t.co

 • நாலு நாளைக்கு நியாபகத்து வந்து பயமுறுத்திட்டே இருக்கணும். நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட? via @kattathorai link to t.co 2/2

 • ROTFLஎல்லாரும் முழு டவுசரைக் கழட்டிட்டு அடிக்கடி கால்ல உழுரானுங்க. நல்லவேளை, இலியானாவுக்கு அப்படி ஒரு சீன் வெக்கலை! link to t.co

 • நண்பன்- தாறுமாறு..தக்காளிச்சோறு விமர்சனம் :-) )) link to t.co @kattathora

 • LOL Enjoyed da selection of wrds nt 2spoil #Nanban fun @kattathora கட்டுரை.காம்..நண்பன் குமுறல் விமர்சனம் link to t.co

 • Sathish says:

  ஆபாசப் பின்னூட்டம் நீக்கப்பட்டது

  (edited)

  பின்னூட்டமிட்டவன் :

  Sathish, KP@gmail.com, IP : 202.3.75.70

 • pkb2w says:

  நீங்க உண்மையாவே விஜய் ரசிகரா… ரொம்ப நாள் ஆச்சு இத மாறி சிரிச்சு…:)

 • ஜேகே says:

  தலைவா, உனக்கு படிப்பு வராம உங்க அப்பா நடிக்க வைச்சாரு. உனக்கு நடிப்பாவது வரணும்னு நாங்களும்,15 வருஷமா உன் மொக்கை படத்தை எல்லாம் ஹிட்டு படமாக்கினோம். இப்ப வந்து விருப்பப்பட்டதை படின்னு அட்வைஸ் பண்ணினா நாங்க எங்க போறது? முதியோர் கல்வியிலே ஏது தலைவா விருப்பப் பாடம்?!

  சுப்பர் தலீவா

  • superman says:

   பின்னூட்டமிட்டவர் தனது குடும்பத்தைப் பற்றி தானே போட்டுக் கொண்ட ஆபாச கமெண்ட் நீக்கப்படுகிறது

   (edited)

   superman
   arvind@gmail.com
   59.92.43.158

 • நீ எதுக்கு தலைவா இந்தப்படத்துலே நடிக்க ஒத்துகிட்ட? – கட்டதொர கடிதம்: link to t.co

 • lorrykaran says:

  சிரிக்கவைக்கும் பதிவு ஒருவேளை இந்த பதிவினை படிக்கும் பாக்கியம் விஜய்க்கு கிடைத்தால் ஒரு நடிகனை…நடிக்கும் நடிகனாக மாற்றிய புண்ணியம் கட்டதொரைக்கு கிடைக்கும்

  • shan says:

   முதல்ல என்ன மீட்பண்ணட்டும்…. கட்டதுரை ..கட்டவிரலையும் உயிர் விரலையும் வெட்டி வீசுரன் அப்பரம் உயிர் இருந்தா….விஜய மீட பண்ணட்டும்…விஜய திருத்த கொட்டதொர யாரு*????? *

 • நீ எதுக்கு தலைவா இந்தப்படத்துலே நடிக்க ஒத்துகிட்ட? – கட்டதொர கடிதம் | link to t.co #nanban

 • true #vijay fan’s #nanban #movie #review – link to t.co – #tamil #bollywood @Actorjiiva @Jharrisjayaraj @directorshankar

 • hotkarthik says:

  என் மனதறிந்த மன்மதன் நீதான்

 • நீ எதுக்கு தலைவா இந்தப்படத்துலே நடிக்க ஒத்துகிட்ட? – கட்டதொர கடிதம் Vijay Fan Rocks!! link to t.co #Nanban #vijay

 • @Thinaesh says:

  நீ எதுக்கு தலைவா இந்தப்படத்துலே நடிக்க ஒத்துகிட்ட? – கட்டதொர கடிதம்: link to t.co

 • @tamilkumar says:

  @pradeepnanban link to t.co இத படிச்சுட்டு சொல்லு.

 • @murgesh194 says:

  Must read to vijay and vijay Fan’s நீ எதுக்கு தலைவா இந்தப்படத்துலே நடிக்க ஒத்துகிட்ட? – கட்டதொர கடிதம்: link to t.co

 • link to t.co நீ எதுக்கு தலைவா இந்தப் படத்தை ஒத்துகிட்ட? #நானும்வழிமொழிகிறேன் #trueclosetvijayfan #misses sura and villu ;)

 • அஜீத் says:

  இது உண்மையிலேயே பாராட்டி எழுதினதா, கிண்டல் அடிச்சு எழுதினதான்னு தெரியாத அளவுக்கு கமெண்ட்ஸ் அடிச்சிருக்காங்க எல்லாரும். ஐய்ய்ய்யோ, ஐய்ய்ய்ய்யோ/

 • @i_am_mano says:

  உண்மையான விஜய் ரசிகனின் குமுறல்கள்,இத பார்த்தாவது விஜய் திருந்துனா சரி RT @kattathora link to t.co

 • @i_am_mano says:

  மனசாட்சிக்கு பயந்து நடக்கும் ஒர் விஜய் ரசிகன் எழுதிய நண்பன் படம் பற்றிய நேர்மையான விமர்சனம் RT @kattathora link to t.co

 • @sheik007 says:

  கட்டதொரயின் கட்ட அடி… :p link to t.co

 • K.Arivukkarasu says:

  கலக்கீட்ட கட்டதொர ! உன் பாணியே தனி !! ட்வீட்லாங்கர் பதிவுகள ரசிச்சதால இதயும் ரசிக்க முடியுது :-)

 • விஜய் ரசிகர்களும் நண்பன் பார்த்தவர்களும் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை ….
  link to t.co

 • @rAguC says:

  கட்டதொர.கலக்கிட்ட போ!விஜய் ரசிகர்களின் உள்ளகிடக்கை///அருமை அருமை.

 • @kattathora ROTFLMAO :-) ))) நீ எதுக்கு தலைவா இந்தப்படத்துலே நடிக்க ஒத்துகிட்ட? – கட்டதொர கடிதம்: link to t.co

 • sridharkannan says:

  தலைவா, உனக்கு படிப்பு வராம உங்க அப்பா நடிக்க வைச்சாரு. உனக்கு நடிப்பாவது வரணும்னு நாங்களும்,15 வருஷமா உன் மொக்கை படத்தை எல்லாம் ஹிட்டு படமாக்கினோம். இப்ப வந்து விருப்பப்பட்டதை படின்னு அட்வைஸ் பண்ணினா நாங்க எங்க போறது? முதியோர் கல்வியிலே ஏது தலைவா விருப்பப் பாடம்?!

  hey super appu kattathora Rocksssssssssssssssssssssss

 • sridharkannan says:

  காட்டு காட்டுன்னு காட்டுவியே, இதுல ஒரு தடவை கூட பஞ்ச் டயலாக்கை நீ காட்டவே இல்லியே. நீ ஏன் தலைவா, இப்படி ஒரு படத்தை ஒத்துகிட்ட?

  Ulitimate :) ))))

 • நீ எதுக்கு தலைவா இந்தப்படத்துலே “நடிக்க” ஒத்துகிட்ட? – link to t.co

 • ben david says:

  nelam ethukuya blogger vacurukkaa????? :P

 • Butter_cutter says:

  like

 • நீ எதுக்கு தலைவா இந்தப்படத்துலே நடிக்க ஒத்துகிட்ட? – கட்டதொர கடிதம் link to t.co

 • sathya says:

  Intha mathiri fans theviya ila thalaiva

 • rasigan says:

  ஆபாசப் பின்னூட்டம் நீக்கப்பட்டது

  (edited)

  பின்னூட்டமிட்டவன் :

  spiderman.bishop31@gmail.com
  122.174.125.43

 • விவிசி “நீ எதுக்கு தலைவா இந்தப்படத்துலே நடிக்க ஒத்துகிட்ட? – கட்டதொர கடிதம்” link to t.co #now following @kattathora

 • Arjun says:

  alith fan gala ungaluku vera velaya ilayada….. facebook la onum pudunga mudilanu ipadi aramichitingala… vijay fans ena panuvanganu elarkum teriyum muditu velaya parungada….. < <ஆபாச வார்த்தைகள் நீக்கப்பட்டன>>

  (edited)

  பின்னூட்டமிட்டவன் :

  Author : Arjun (IP: 182.156.40.233 , Static-233.40.156.182.tataidc.co.in)
  E-mail : shtylish.shukru@gmail.com

 • ஹா ஹா கலக்கல் காமெடி செம செம

 • Muralidharan says:

  இதுக்கு பெயர் தான் தமிழ் இலக்கணத்தில், வஞ்ச புகழ்ச்சி அணி. விஜய்ய திட்டுற மாதிரி திட்டி அவன ரொம்ப புகழ்ந்திட்டிங்க……. படிக்கறவங்க, இத மேலோட்டம படிக்காம, இதோட உள்கருதை புரிந்து கொள்ளுங்கள்…. விஜய்க்கு இந்த படம் ஒரு மிக பெரிய வெற்றின்னு சொல்லாம சொல்றாங்க……..

 • simon says:

  ஆபாசப் பின்னூட்டம் நீக்கப்பட்டது
  (edited)

  பின்னூட்டமிட்டவன் :

  simon
  notavijayfan@cinema.com
  122.183.224.86

 • iynkaran(jaffna) says:

  .
  3 Idiots, ஹிந்தி படத்தை தமிழ் sub title உடன் பார்த்ததால் நண்பன் படம் சப்பென்று இருந்தது.
  அமீர்கான் அளவுக்கு கொஞ்சமாவது தோதான ஆளை செலக்ட் பண்ண சங்கருக்கு தெரியவில்லையாக்கும். ஹிந்தி படத்தில் வந்த அதே சீன் அதே டயலேக் தான் இதிலையும் பேசாம அப்பவே 3Idiots ஐ தமிழ் audio வுடன் வெளியிட்டிருக்கலாம்…

 • Karunaakku says:

  Dear Kattadorai!
  Congratulations! The article is simply fantastic! I read it twice! Keep it up!
  -Karu_naakku

 • nixson says:

  supperaka aluthijirukkiraar namma kadda thurai.kaddaththuraikku kaddam sarijillaijenru yarum ninaichsidaathinka unmaiyana karuththai avar sollijirukkirar.thank.u. kaddaithurai,,,,,,,,,,,,,,,,,,

 • விஜயைப் பாத்து “அவனா நீ’’ன்னு இலியானா கேட்டத விட்டுட்டயே கட்ட… ஐயகோ…

 • நீ எதுக்கு தலைவா இந்தப்படத்துலே நடிக்க ஒத்துகிட்ட? – கட்டதொர கடிதம்: link to t.co

 • sugumarje says:

  கலக்கல் :)

 • SaiKiran Nanduri says:

  dei…arivu irka ** unakku…ennamo vijay mokka padatha ella ne kai thatti hit panniya…mutta paya vulla…poove unakkaha..thulladha mananum thullum…kaadhalukku mariyadhai…kushi…badhri….ghilli…thirupatchi…sivakasi…sachin…pokkiri….priyamanavale….ethana silver jubilee padam…kuruvi flop da ngothaaa….inime idhamari mokka kattura ezhudhune nu vai…veedu thedi vandhu midhipen….commercial line le hit achu…adhanala sura mari padam pannaru thalaivaru…flop airuchu…ipo dhan back to class muvis…hindi padam attu copy dhan…ana nadippu le aamir khan vida range kudichuruchu….namma thalaivar mass hero…ana varala class’a vum nadika mudium nu prove panitaru…ana aamir khan naala mass hero aha mudiadhu…yaru gethu????so…neenga ******* muditu velaya parunga….

  (edited)

  Author : SaiKiran Nanduri (IP: 122.165.79.195 , ABTS-TN-Static-195.79.165.122.airtelbroadband.in)
  E-mail : saikirannanduri@yahoo.com

 • John says:

  மிக ஆபாசப் பின்னூட்டம். பின்னூட்டம் போட்டவனின் அம்மாவைப் பற்றிய சிறு குறிப்புடன் வந்திருக்கிறது.

  (edited)

  John
  John.1990@gmail.com
  IP : 141.0.8.162 (IP: 141.0.8.162 , s11-04.opera-mini.net)

 • rilwaan says:

  ada **** unakku padam parkka theriyatha ithu evvelavu arumayana supper padam vijay da nadippu eppadi.summa indha mathiri eludhikkittu waratha apparam ne irukka matta.***** ***.pera paru munchu neum.

  (edited)
  rilwaan
  rilwaan_r@live.com
  112.134.73.149

 • அட! ஐபி அட்ரஸ் கூட வெளியிடறீங்க. நான் யாரு சொல்லுங்க பாப்போம்?

 • @selvu says:

  நண்பன் படம் நான் பார்க்கவில்லை. இனிமேல்தான் பார்க்கவேண்டும். நண்பன் படத்தை இதைவிடப் புகழ்ந்து எழுதுவது சிரமமே. உண்மையில் இதுவரையில் இருந்த விஜயை இந்தப் படத்தில் இல்லை என்றே அழகாக அங்கதமாகச் சொல்லிருக்கீங்க. வாய்ப்பே இல்லை.

  உங்க விமர்சனத்தைவிட உங்களின் வார்த்தைத் தேர்வுகள் மற்றும் எழுதிய விதம் வாய்ப்பே இல்லை. இன்னும் சிரித்துக் கொண்டே இருக்கிறேன். மிக மிக கலக்கலான எழுத்து நடை. ராஜபாட்டை விமர்சனம் உங்க ப்ளாக்ல படிச்சேன். அப்பவே உங்க விமர்சனத் திறமையும், நகைச்சுவையும் ரொம்ப பிடிச்சிருந்தது. இதிலும் கலக்கிருக்கீங்க.

  அனேக இடங்களில் சிரிப்பை அடக்கமுடியவில்லை. ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு :) )

 • shan says:

  கட்டதொர bro விஜய் நடிப்ப ஷங்கரே ஒன்னும் சொல்லல் நீயாரு* **???? கையில கிடைச்ச ஆ** ***ல கட்டை இரக்குவேன் – **** of the writer!!!

  உங்கள புண்படுத்த செல்லல்ல..சும்மா விளையாட்டுக்கு….

  (edited)
  shan
  test.com
  prashasoft@gmail.com
  123.231.18.109

 • anand says:

  I think u r *** and cant understand the story

  (edited)
  anandh83@gmail.com
  115.241.42.86

 • விஜயை திட்டினாலும் ஹிட்டு…. ஹீ ஹிஹிஹி.. link to t.co

 • LOL…உனக்கு படிப்பு வராம உங்க அப்பா நடிக்க வைச்சாரு.உனக்கு நடிப்பாவது வரணும்னு நாங்களும்,15 வருஷமா உன் மொக்கை படத்தை link to t.co

 • Vijay rasigan says:

  Periya **** ivaru, Vijay ku nadippu pathi laam solli tharaaru. Moonja paaru, ivan laam vantaan enga thalapathy ku advice panna

  (edited)
  Vijay rasigan
  122.174.175.96

 • romba nallavan says:

  கட்டதுரை கலக்கிடீங்க…
  இது தான் உண்மையிலேயே வஞ்ச புகழ்ச்சி அணி
  புகழ்வது போல் இகழ்வதும்
  இகழ்வது போல் புகழ்வதும்
  நீங்க புகழ்ந்தீங்களா…
  இகழ்ந்தீங்களா அப்படின்னே தெரியாம…
  சொல்ல வேண்டியது சொல்லிடீங்க..
  உண்மை கொஞ்சம் சுடும் ..நிறைய பேர் இதை படிச்சிட்டு
  கோபமா எழுதுவாங்க..பரவாயில்ல..
  இதுக்கு டப் பண்ணியிருக்கலாம்..
  இதுக்கு ஒரு சங்கர் தேவையா…நல்ல கேள்வி..
  எப்படியோ….கட்டதுரை..
  இது மாதிரி நிறைய எழுதுங்க …

 • தல தளபதி says:

  * *** *ட்டதொர ! விமர்சனம் எந்த கஞ்சபிசகனும் எழுதலமா ? நண்பன் சுப்பர் ! கன காலத்தின் பின் விஜயின் மசாலா படம் போல் இல்லாம நல்ல காமெடி சூப்பரா இருந்திச்சு !!!

  (edited)
  தல தளபதி
  thambyooo7@gmail.com
  174.138.194.141

 • Vinoth says:

  விஜய் எவ்வளுவுதான் (if at all) முயற்சி செய்து நல்ல படத்தில் நடித்தாலும், இந்த அரை வேக்காடு ரசிகர்கள் விட மாட்டார்கள்… ‘நான் இன்னாரின் ரசிகன்’ என்று சொல்வதே ஒரு வெட்கக்கேடான விஷயம்…

 • sathish says:

  gud review

 • Vijay says:

  **** ****** *****
  (edited)
  vijay1989@gmail.com
  122.174.40.58

 • Vijay rasigargalin manakkumural! Appadiye velippaduthi irukeenga!
  Itha vijay padikkanum!

 • தினகர் says:

  கட்டதொர இல்லே கலக்கல் தொர..

 • yuvi says:

  waste comment. Please stop writing !!! Its good for the nation !!!

 • Kanna says:

  @Author you have gotta extraordinary narrating skills. But its utterly waste and it make your name damage narrating on such a nice movie. It more shows your characters not your narrating skills. Choose the right movie to write a critics. That’s my view.

 • @thoatta says:

  யோவ் மச்சி நீ உண்மையாலுமே பெரிய கலைஞன்யா ;) ) செம செம செம காமடியா கடைசி வரை கொண்டு போயிருக்க.! கீழ் கண்ட இந்த வரிகள் சான்ஸ் லெஸ்.! உண்மையா சொல்றேன், சூப்பரப்பு.!!!
  <<>>

 • valli says:

  கட்ட தொர உங்களின் இந்த நண்பன் பட விமர்சனம் ரொம்ப ஃபேமஸுங்கோ…! ஃபேஸ்புக்குல இது சுத்தி சுத்தி வந்துகிட்டு இருக்கு..! ஒரு அட்டு சுரா பட ரசிகனின் பார்வையில் விமர்சனத்தை காமெடியா கமறு கமறி இருக்கீங்க..! வெல்டன்..!!!

 • karthick says:

  iliyana comedy super.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Copyright © 2012 Katturai.com – கட்டுரை.காம். All Rights Reserved
ஆசிரியர் : மாயவரத்தான் (www.Mayavarathaan.in / Twitter : @mayavarathaan )
வடிவமைப்பாளர் & துணை ஆசிரியர் : வின்மணி (www.winmani.com)

DMCA.com