இணையத் தமிழ் கட்டுரை உலகம்

ஜெயலலிதா

ஹிந்துக்கள் மானசரோவர், முக்திநாத் செல்ல மானியம் – முதல்வர் ஜெ!

முதல்வர் ஜெ

சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்தில் உள்ள முக்திநாத் ஆகிய புனித இடங்களுக்கு யாத்திரை செல்லும் இந்துக்களுக்கு தமிழக அரசு பயணச் செலவுக்கு மானியம் வழங்கும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சட்டசபையில் இன்று விதி எண் 110ன் கீழ் அவர் தாக்கல் செய்த அறிக்கையில், “ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் இறைவனை காணும் பணி மேற்கொள்வோம்’ என அனைத்து மதத்தினரும் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். கிறிஸ்தவ பெருமக்கள் ஜெருசலம் புனித யாத்திரை மேற்கொள்ளவும், இந்துக்கள் சீனாவில் உள்ள [...]

Share

, , , ,

நம்பலாமா ஜோதிடத்தை? #1

Josiyam

ஜோதிட சாஸ்திரம் உருவான காலம் முதல் ஜோதிடர்களுக்கு என்று ஒரு மரியாதை இருந்து வந்திருக்கிறது. அந்தக் காலத்திலிருந்து அரசர்கள் ஒரு காரியத்தை செயல் படுத்த வேண்டும் என்றால் தனது ஆஸ்தான ஜோதிடரிடம் அந்தக் காரியம் வெற்றி அடையுமா? அல்லது தோல்வியில் முடியுமா? என்பதை நன்றாக ஆராய்ந்து வெற்றியில் முடியும் என்றால்தான் அந்தக் காரியத்தையே செய்வார்கள். போர்க்காலத்திலும் இது போன்றே தான் ஜோதிடரின் கூற்றின் துணை கொண்டு நல்ல நாள் குறித்து போருக்குச் செல்வார்கள். இராமாயண காலத்தில் இராவணன் தனக்கும், தன் குலத்திற்கும் இராமனால்தான் அழிவு [...]

Share

, , , , , ,

அமெரிக்காவிலும் ‘அம்மா’வின் புகழ்

Hillary Rodham Clinton, J. Jayalalithaa

உலகப் புகழ்பெற்ற அமைப்பான ப்ரூகிங்ஸ் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ளது. இந்த அமைப்பு அரசியல், சமூக, பொருளாதார ஆய்வுகளுக்கு பெயர் போனது. இந்நிலையில் இந்த அமைப்பின் நிர்வாக இயக்குனர் வில்லியம் ஜே.அந்தோலிஸ் முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டி கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். இது ஏதோ ஒரு அமைப்பு கொடுத்த ‘உலகப் புகழ் பெற்ற விருது’ என்று அவர்கள் கட்சிக்காரர்களே புளகாங்கிதப்பட்டு ரீல்சுற்றி வெளியாகும் ‘டுபாக்கூர்’ செய்தியல்ல. ப்ரூகிங்ஸ் இணையதளத்தில் உள்ள அந்தக் கட்டுரையில் அவர் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் மீண்டும் [...]

Share

, , ,

சினிமா, கிரிக்கெட், அரசியல் – திரிவேணி சங்கமம்!

cricket

”தமிழினமும், தேசியமும் நம் இரண்டு கண்களாக இருக்க வேண்டும்” என்றார் பாரதி. இதையே வலியுறுத்தினார் தெய்வத்திருமகன் முத்துராமலிங்கத் தேவர். ஆனால், நமக்கெல்லாம் இப்போது, சினிமாவும் கிரிக்கெட்டும்தான் இரு கண்களாக இருக்கின்றன. இதில் இடைச் செருகலாக, மூன்றாவது கண்ணாக, அதாவது நெற்றிக் கண்ணாக அரசியலும் சேர்ந்து கொண்டிருக்கிறது. நம் நாட்டில் சினிமா, கிரிக்கெட், அரசியல் – இந்த மூன்றுக்கும் தரப்படும் முக்கியத்துவம் வேறு எந்தத் துறைக்கும் தரப்படுவது இல்லை என்று பொதுவான குற்றச்சாட்டு உண்டு.  ஆனால், இந்த மூன்று [...]

Share

, , , , , , , , , , ,

செம்மொழிப்பாட்டுக்கு எசப்பாட்டு

karuna & jaya

சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்கள் படுதோல்விகளின் தொடர்ச்சியாக அதிரடி சோதனைகள், விசாரணைகள், கைது, வழக்கு என்று நேரடி தாக்குதலால் திக்குமுக்காடிக் கொண்டிருக்கும் திமுகவிற்கு,  இப்போது மறைமுகத் தாக்குதலும் ஆரம்பாகியுள்ளது. சட்டமன்றக் கட்டிடத்தில் ஆரம்பித்து, அண்ணா நூலகம், சமச்சீர் கல்வி, மெட்ரோ ரயில் திட்டம், காப்பீடுத் திட்டம் வரை,  திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அனைத்திலுமே, அவர்கள் பெயரோ அல்லது அதன் தலைவர் பெயரோ, நாளையே சரித்தரத்தில் இடம் பெற்று விடக் கூடாது என்று முடிவோடு அதை ரத்து [...]

Share

, ,

கூட்டணி முறிவா, கூட்டணிக்கு முடிவா?

jayalalitha & vijayakanth

’கொடி அசைந்ததும் காற்று வந்ததா, காற்று வந்ததும் கொடி அசைந்ததா?’ என்ற புகழ் பெற்ற திரைப்பாட்டு வரி தான், தமிழக மக்களின் லேட்டஸ்ட் டாபிக்கான ’சட்டசபை தேர்தலில் அதிமுக ஆதரித்தலால் தேமுதிக வெற்றி பெற்றதா?  தேமுதிக ஆதரித்தலால்தான் அதிமுக வெற்றி பெற்றதா?’ என்ற விவாதத்தை கேட்கும் போது, நியாபகத்துக்கு வருகிறது. இரண்டு கட்சிகளுக்குமே கடந்த சட்டமன்ற தேர்தலில் கிடைத்த வெற்றி, திமுக எதிர்ப்பு அலையினாலும், கூட்டணியின் பலத்தாலும் கிடைத்த வெற்றியாகத் தான் கொள்ள வேண்டும். 1989-ம் ஆண்டு [...]

Share

, , , , , , ,

ஜெவும், கருணாநிதியும் அண்ணா ஆரம்பித்த கட்சியில் புகுந்த கருநாகங்கள்! – விஜயகாந்த் தாக்கு

விஜயகாந்த்

நேற்று சட்டசபையில் கடும் விவாதம் நிகழ்த்திய தேமுதிக தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான விஜயகாந்த், சட்டமன்ற மாண்புகளுக்கு எதிராக நடந்து கொண்டதாகக் கூறி 10 நாட்கள் சட்டமன்றத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து சென்னையில் தேமுதிக தலைமையகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த விஜயகாந்த் பேசியவற்றில் இருந்து… நாங்களா அதிமுகவுடன் கூட்டணிக்கு அலைந்தோம். அவர்கள்தான் வந்தார்கள், அவர்கள்தான் கூப்பிட்டார்கள். நாங்கள் அவர்களுக்கு ஆதரவு கொடுத்ததால்தான் அவர்கள் ஜெயித்தார்கள். நாங்கள் மட்டுமில்லை, மக்கள் இவர்களுக்கு ஆதரவு கொடுத்ததால்தான் ஜெயித்தார்கள். என்னுடைய [...]

Share

, , , ,

ஜெ vs. விஜயகாந்த் – நடந்தது என்ன?

jayalalitha

”தகுதியே இல்லாத தேமுதிகவுடன் கூட்டணி வைத்ததற்காக இப்போது நான் வெட்கப்படுகிறேன். என் கட்சித் தொண்டர்களை திருப்திப்படுத்தவே,  விருப்பமில்லாமல் தேமுதிகவுடன் கூட்டணி வைத்தேன்.  விஜயகாந்த் இன்று சட்டசபையில் நடந்து கொண்டதைப் பார்த்தால், தகுதியில்லாதவர்கள் அரசியலில் உயர் நிலையை எட்டினால் தேமுதிகவினர் போலத்தான் நடப்பார்கள் என்பது தெரிகிறது” என்று முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் வெகு காட்டமாகப் பேசியுள்ளார். மேலும் அவர் பேசுகையில், “தேமுதிக தலைவர் விஜயகாந்த் சட்டசபையில் இன்று பேசிய பேச்சுக்கள் மிகவும் கீழ்த்தரமானது. சபையின் மாண்பை அவரது பேச்சு [...]

Share

, , , , , ,

சாத்தான்கள் ஓதிய வேதம் – இலங்கை நாடாளுமன்றத்தில் கொலைவெறி

கொலைவெறி

இலங்கை நாடாளுமன்றத்தில் (அது ஒண்ணு தான் கேடு) நடைபெற்ற விவாதத்தில் (ஓ..அந்தக் கண்ராவியெல்லாம் கூட நடக்குமா?) பேசிய ஆளும்கட்சி உறுப்பினர் அஸ்வர் என்ற நபர் உதிர்த்துள்ள தத்துவ முத்துகள் : தமிழ்நாட்டுகாரர்களுக்கு கொலை வெறி பிடித்துள்ளது. அதனால் தான் அவர்கள் கொலை வெறி கொலை வெறி என பாடல்களில் கூட பாடுகின்றனர். இந்தக் கொலை வெறிப் பாடலுக்கு எமது யாழ்ப்பாண இளைஞன் பதிலடி கொடுத்து பாடியுள்ளார். அந்தப் பாடலை தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும், திமுகவின் கருணாநிதிக்கும் அனுப்பி [...]

Share

, , , , ,

எம்.ஜி.ஆர். பிறந்த நாள் – ஜெ. கடிதம்

1

இதய தெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தமான, என் உயிரினும் மேலான எனதருமை கழக உடன்பிறப்புகளே! பெருமிதம் கொள்ளத்தக்க தன் வாழ்நாள் சேவைகளாலும், தன்னிடமிருந்து இந்தச் சமூகம் பெற்றுக்கொண்டதெல்லாம் நல்லதை மட்டுமே என்னும் பெருமை கொண்ட வாழ்வாலும், உலகெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளங்களில் எல்லாம் நிலைத்த இடம் பிடித்து நினைவில் இருந்து நீங்காது வாழுகின்ற காவியமாம், கழக நிறுவனத் தலைவர் நம் இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 95-ஆவது பிறந்த நாளை கொண்டாடுவதில் நாம் அனைவரும் [...]

Share

, , , ,

Copyright © 2012 Katturai.com – கட்டுரை.காம். All Rights Reserved
ஆசிரியர் : மாயவரத்தான் (www.Mayavarathaan.in / Twitter : @mayavarathaan )
வடிவமைப்பாளர் & துணை ஆசிரியர் : வின்மணி (www.winmani.com)

DMCA.com